முதலமைச்சரின் ம. தொ. அ. இயக்குனர் (ஒய்வு) திரு.மு.விஜயகுமார் இல்ல திருமண விழாவில் மு.அமைச்சர் வி.எஸ்.விஜய் பங்கேற்பு
முதலமைச்சரின் மக்கள் தொடர்பு அலுவலகம் உதவி இயக்குனர் (ஒய்வு) திரு.மு.விஜயகுமார் அவர்களின் இல்லத் திருமண விழாவில் தலைமை கழக தேர்தல் பணிக்குழு செயலாளர், முன்னாள் அமைச்சர் டாக்டர்.வி.எஸ்.விஜய் அவர்கள் கலந்து கொண்டு வி.கிஷோர்குமார் - மே.ஷாமினிபிரியா மணமக்களை வாழ்த்தினார். உடன் கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
காற்றாலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
ஓட்டப்பிடாரம், பிப்.16-
ஓட்டப்பிடாரம் அருகே காற்றாலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ளது பாறைக்குட்டம் கிராமம். இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அப்பகுதியில் வீடு கட்டுவதற்காக 309 பேருக்கு அரசால் பட்டா நிலம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் அந்த இடத்திற்கு அருகே காற்றாலை அமைக்க சில தனியார் நிறுவனங்கள் இடத்தை தேர்வு செய்தது. அந்த பகுதியில் காற்றாலைக்கு பள்ளம் தோண்டி காங்கிரீட் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பணி நடைபெறும் இடத்திற்கு சென்று போராட்டம் நடத்தினர். மேலும் காற்றாலை எந்திரத்தை ஏற்றி வந்த லாரியையும் சிறை பிடித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த இடத்திற்கு அருகே எங்களது பட்டா நிலம் உள்ளது. இப்போது காற்றாலை அமைத்தால் நாங்கள் குடியிருக்க முடியாது. எனவே இந்த பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில் இந்த இடத்தில் உடனடியாக பள்ளம் தோண்டி அதில் குடியேறும் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

No comments
Thank you for your comments