Breaking News

கனிம வள புதிய டெண்டர்களுக்கு இடைக்கால தடை

கிருஷ்ணகிரி, பிப்.26-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிம வளங்களை எடுப்பதற்கான புதிய டெண்டர் அறிவிப்புக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் கிரானைட்டுகளை வெட்டி எடுக்க கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்ட டெண்டர் அறிவிப்புகளை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன.

அது தொடர்பான விசாரணையில் டெண்டர் நடவடிக்கை தொடரலாம் என்றும் ஆனால் அந்த இடங்களை ஒப்படைக்க கூடாது என்று இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் 17 குவாரிகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 குவாரிகளும் அமைக்க பிப்ரவரி மாதம் புதிய டெண்டர் அறிவிக்கப்பட்டது. அதை எதிர்த்து, சுற்றுச்சூழல் விதிகள் மீறப்பட்டுள்ளதாக தாக்கல் செய்த 2 மனுக்களை விசாரித்த நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.


No comments

Thank you for your comments