Breaking News

குடிமராமத்து பணிகள் திட்டத்தில் ஏரிகளை தூர்வார கோரிக்கை!

அரூர், பிப்.16-

அரூர் வட்டாரப் பகுதியிலுள்ள ஏரிகளை குடிமராமத்து பணிகள் திட்டத்தில் தூர்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 



எச்.அக்ராஹரம் ஊராட்சிக்கு உள்பட்ட நெருப்பாண்டகுப்பம் ஏரி, நாய்க்கன் ஏரி, ஆட்டியானூர் ஏரி, அரூர் பெரிய ஏரியின் ராஜகால்வாய்,  உள்ளிட்ட ஏரிகளை தூர்வார தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். 

தருமபுரி மாவட்டம், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் ஏரிகள், குளம் குட்டைகள், நீர்வரத்து கால்வாய்கள் பல வருடங்களாக தூர்வாரப்படாமல் உள்ளன. இதனால், பருவமழைக் காலங்களில் மழைநீரை தேக்கி வைக்கவும், மழைநீர் வழிந்தோடுவதற்கு தேவையான கால்வாய் வசதிகளும் இல்லை. தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, காரிமங்கலம் மற்றும் தருமபுரி வட்டாரப் பகுதியிலுள்ள ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் குடிமராமத்து பணிகள் திட்டத்தில் தூர்வரப்பட்டுள்ளன. இதனால், அங்குள்ள ஏரிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. வேளாண்மை பணிகளும் மேம்பாடு அடைந்துள்ளன. 

அதேபோல், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியிலுள்ள ஏரிகளை பொதுப்பணித்துறை சார்பில் கணக்கெடுப்பு செய்ய வேண்டும். மேலும், சந்தப்பட்டி ஏரி, கௌலப்பாறை மொள்ளன் ஏரி, எச்.அக்ராஹரம் ஊராட்சிக்கு உள்பட்ட நெருப்பாண்டகுப்பம் ஏரி, நாய்க்கன் ஏரி, ஆட்டியானூர் ஏரி, அரூர் பெரிய ஏரியின் ராஜகால்வாய், மாவேரிப்பட்டி ஏரி, கொளகம்பட்டி ஏரி, மங்கானேரி உள்ளிட்ட ஏரிகளை தூர்வார தமிழக முதல்வர்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

No comments

Thank you for your comments