Breaking News

வேலூரில் பல அடுக்கு வாகன நிறுத்த கட்டட திறப்பு விழா!

 வேலூர், பிப்.24-

வேலூர் மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.11 கோடியே 3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல் அடுக்கு வாகன நிறுத்த கட்டடத்தை சென்னை தீவுத்திடலிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். அதனையடுத்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். வேலூர் மாநகராட்சியில் புதிய பேருந்து நிலையம் அருகே சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பல் அடுக்கு வாகன நிறுத்த கட்டடம் 6662 சதுரடியில் ரூ.11 மதிப்பில் தரை தளத்தில் 42 கார்கள் நிற்கும் வகையிலும், முதல் மற்றும் மூன்றாம் தளத்தில் 1059 இருசக்கர வாகனம் நிறுத்தும் வகையிலும் மூன்று அடுக்கு கட்டட கட்டுமானப்பணிகள் 05.03.2019 அன்று தொடங்கப்பட்டு 08.03.2021 முடிக்க ஆணை வழங்கப்பட்டது. பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற விழாவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்துள்ளார் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சங்கரன், மாநகராட்சி செயற்பொறியாளர்கள் சீனிவாசன், கண்ணன், நகர் நல அலுவலர் மரு.சித்ரசேனா, உதவி ஆணையர்கள் பிரபுகுமார், செந்தில், மதிவாணன், வெங்கடேசன், உதவி பொறியாளர்கள் செல்வராஜ், ஆறுமுகம், ஒப்பந்ததாரர் முருகன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இவ்வாறு வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.


No comments

Thank you for your comments