வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து ஆய்வாளர் வசூல் வேட்டை!
வேலூர், ஆக.10-
வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து ஆய்வாளர் கருணாநிதி வசூல் வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சத்துவாச்சாரி ஆர்டிஓ ரோட்டில் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் ஆய்வாளராக பணியாற்றுபவர் கருணாநிதி. இவர் வேலூர் மாநகராட்சி 2வது மண்டல அலுவலகம் உள்ள வீதியில் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து எஃப்சி செய்து வரும் பழைய வாகனங்களை பார்வையிட்டு தகுதி சான்றிதழ் வழங்கி வருகிறார். புதிய வாகனங்களுக்கு அந்தந்த தனியார் வாகன ஷோரூம் விற்பனை பிரதிநிதிகள் மொத்தமாக கொண்டு வந்து வைத்திருக்கும் ஆவணங்களை பரிசோதித்து விட்டு அந்த வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்கி வருகிறார்.
இதில் ஆட்டோக்கள், லோடு வேன்கள், லாரிகள், கார்கள் மட்டும் தனியாக கணக்கிடப்படுகிறது. இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் என்று எங்கு பார்த்தாலும் அந்த வீதியில் வாகனங்களாக காட்சியளிக்கின்றன. இவர் பணியாற்றும் அலுவலகத்தில் துணை போக்குவரத்து ஆணையர் அலுவலக வளாகத்தில் இந்த அலுவலகமும் செயல்படுகிறது.
அப்படி இருக்கும் போதே நடுரோட்டில் நின்றவாறு பணத்தை பெற்றுக் கொண்டு செல்வதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் அங்கு செல்லும் சில செய்தியாளர்களுக்கும் தலா ரூ.500 சன்மானமாக அளித்து அனுப்புகிறார் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கருணாநிதி. பத்திரிகையாளர்களை கவனிக்கும் பணியை முன்னர் தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியைச் சேர்ந்த சிலர் பார்த்து வந்துள்ளனர். அவர்கள் பொய் கணக்கு அளித்து விட்டு பணத்தை சுருட்டிக் கொள்வதாக புகார் எழுந்ததால் ஆய்வாளர் கருணாநிதி கவனித்து வருவதாக கூறப்படுகிறது. இவர் ஆளை பார்த்து அடையாளம் பார்த்துதான் ÔபÕ வைட்டமின் அளிப்பாராம். இது தெரிந்து கொண்ட பல டுபாக்கூர் செய்தியாளர்கள், போலி பத்திரிகையாளர்கள் எல்லாம் இந்த புண்ணியவானை பார்க்க படையெடுத்து வருகின்றனர்.
இது உண்மையில் நடைபெறுகிறதா? வசூல் வேட்டையில் கருணாநிதி ஈடுபடுகிறாரா என்றால் உண்மை என்பதை நேரில் சென்றால் தினமும் காணலாம். அந்த கண்கொள்ளா காட்சியை தினமும் இந்த பகுதியில் பார்க்க முடிகிறது என்கின்றனர் பல சமூக ஆர்வலர்கள். வசூல் வேட்டை வெளியில் தெரியாமல் இருக்க செய்தியாளர்கள் போர்வையில் யார் வந்தாலும் அவர்களுக்கு ஒரு சிறு அன்பளிப்பு என்ற ரீதியில் ரூ.500 அளித்து அவர்களை சரிகட்டி விடுகிறாராம் இந்த பலே ஆய்வாளர். இவர் பெயரை சொன்னாலே அங்குள்ளவர்கள் அஞ்சி நடுங்குகிறார்கள். வசூல் வேட்டையில் கைதேர்ந்தவராம் இவர். இவரை மிஞ்சிட ஆளே இல்லை என்ற ரீதியில் செயல்பாடும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகம் இருந்தும் பயமறியாமல் வசூல் வேட்டையில் இறங்கி அசத்துகிறாராம் மனிதர்.
லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கண்காணிப்பு இல்லாமல் போனதால் இவர்கள் காட்டில் கனமழை பெய்கிறதாம். கடந்த 2010ல் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையின் போது இந்த அலுவலகத்தின் கழிவறைகளில் கட்டு கட்டாக பணம் வீசப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி "ப" வைட்டமினை வசூல் செய்து கொண்டு தினமும் கல்லா கட்டி வரும் மோட்டார் வாகன ஆய்வாளர் கருணாநிதி பிற்பகல் 1.45 அல்லது 2 மணிக்கு அலுவலகம் வருவார். உடனே 5 நிமிடத்துக்கெல்லாம் வீட்டுக்கு சென்று விடுகிறார். பணத்தை பத்திரப்படுத்தி விட்டு மாலை 4 மணிக்கு மேல்தான் அலுவலகம் வருகிறார். என்ன ஒரு கடின உழைப்பு, என்ன ஒரு மெச்சிக் கொள்ளும் வகையில் வசூல் வேட்டை நடத்துகிறார் மனிதர். வசூல் வேட்டையில் இவரை மிஞ்ச ஆளே இல்லையாம். இவருக்கு நிகர் இவர்தான் என்று சொல்லப்படுகிறது. அந்தளவுக்கு வசூல் வேட்டையில் கண்ணும் கருத்துமாக செயல்படுகிறார் கருணாநிதி. கருணாநிதி என்ற பெயரை வைத்து கொண்டு கறாராக நடந்து கொள்கிறாராம். ஆல் இன் ஆல் அழகு ராஜா என்று இவரை அந்த அலுவலகத்தில் பணியாற்றும் சக பணியாளர்கள்,
ஊழியர்கள் அழைக்கின்றனர். எஃப்சிக்கு வரும் வாகனங்களில் குறைபாடுகள் காணப்பட்டால் ÔபÕ வைட்டமினை அடித்தால் போதுமாம் கண்டுகொள்ளாமல் கையொப்பமிட்டு விடுவாராம்.
அப்படி பணம் கொடுப்பவர்களுக்கு நன்றியுள்ள நல்ல மனிதராக செயல்படுகிறாராம். அரசுக்கு பேரிழப்பு ஏற்படுத்தி வருவது இவரது நடவடிக்கையை பார்த்தாலே தெரிய வரும். மாநகரில் ஒரே பதிவு எண்ணில் 4க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்குகின்றன. லாரிகள் இயங்குகின்றன. ஆனால் இதுவரை எதையும் இவர் பிடித்ததாக தகவல்கள் ஏதும் இல்லை. சோதனைக்கு செல்லாமல் வசூல் வேட்டையில் மட்டும் குறியாக உள்ளாராம். நின்றால் வசூல், பேசினால் வசூல். வசூல் ராஜாவாக வலம் வருகிறார் கருணாநிதி. நிதி மட்டும்தான் இவரது பிரதான வேலையாக உள்ளது. நிதி திரட்டிக் கொண்டு சென்று விடுவாராம். துணை போக்குவரத்து ஆணையரும் இவரது நடவடிக்கைகளை கண்டும் காணாமல் விட்டு விடுகிறாராம். இவரது நடவடிக்கையால் மீண்டும் இந்த ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இந்த அலுவலகத்தில் சோதனை நடத்த வருகை தந்தாலும் ஆசசரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர் சில புரோக்கர்கள் மற்றும் தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தும் உரிமையாளர்கள். கருணாநிதி என்ற பெயரை வைத்து கொண்டு நிதியை சேகரிப்பதில் கண்கொத்தி பாம்பாக செயல்படுகிறார். இவரது பணியை காணவேண்டும் என்றால் தினமும் சத்துவாச்சாரியில் மாநகராட்சி 2வது மண்டல அலுவலகம் அமைந்துள்ள சாலையில் சென்றால் நேரடியாக காணலாம். யாருக்கும் பயப்படாமல் பணியாற்றுகிறார். லஞ்ச ஒழிப்பு துறை என்ன செய்து விடும் என்று அங்கு இவரை நாடி வரும் பொதுமக்கள், ஆட்டோ, லாரி, கார், இருசக்கர வாகன ஷோரூம் விற்பனை பிரதிநிதிகளிடம் கூறி கொக்கரிக்கிறாராம் இந்த மாமனிதர். இவர் லஞ்ச ஒழிப்பு தூண்டிலில் சிக்குவாரா? இல்லை இவரது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments
Thank you for your comments