பணம் பறிக்கும் செய்தியாளர்கள் பற்றிய செய்திக்கு அதிகாரிகள் மத்தியில் வரவேற்பு!
வேலூர், ஜூலை 3-
பணம் பறிக்கும் செய்தியாளர்கள் பற்றிய செய்திக்கு அதிகாரிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
வேலூரில் பெருகி வரும் பணம் பறிக்கும் செய்தியாளர்கள் குறித்து நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் (என்.ஜே.யூ.) சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையானது சென்ற 01.07.2020 தேதியிட்ட காலச்சக்கரம் நாளிதழில் வெளியாகி சம்மந்தப்பட்ட நபர்களுக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அந்த அறிக்கை செய்தியை வாசித்த பல அரசு அதிகாரிகள் என்.ஜே.யூ.வின் தேசிய தலைவர் டாக்டர் கா.குமாரை தொடர்பு கொண்டு உண்மையான அறிக்கையை வெளியிட்டிருக்கிறீர்கள். பணம் பறிக்கும் செய்தியாளர்கள் பற்றின உங்களது அறிக்கை வெளியான பின்னர் இந்த இரண்டு நாட்களில் அப்படிப்பட்டவர்கள் எவரும் எங்கள் பக்கமே வரவில்லை.
இனி பணம் பறிக்கும் நோக்கில் எங்களிடம் வரும் செய்தியாளர்களைப் பற்றி காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப் போகிறோம். இதுகுறித்த நடவடிக்கைக்கு நாங்கள் எங்கள் உயர் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளோம். அதுமட்டுமின்றி காவல் துறையின் உளவுப்பிரிவினரும் எங்களிடம் சில தகவல்களை கேட்டுள்ளார்கள். யாரெல்லாம் பணம் பறிக்கும் செய்தியாளர்கள், அவர்கள் பணியாற்றும் நிறுவனத்தின் பெயர் மற்றும் விலாசம் ஆகியவற்றை பெற்று அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். அந்த தகவல்களையெல்லாம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் (பி.ஆர்.ஓ. அலுவலகத்தில்) வாங்கிக்கொள்ளச் சொல்லியிருக்கிறோம்.
நாங்கள் அரசு அதிகாரிகள், எங்கள் அலுவலகங்களில் கள்ள வியாபாரமா நடத்துகிறோம். அதனால் இனிமேல் பணம் பறிக்கும் செயலை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் நோக்கில் எவர் வந்தாலும் புகார் அளிக்க தயாராக இருக்கிறோம். என்.ஜே.யூ.விடமும் முறையிடுவதாகச் சொல்கிறார்கள். அறிக்கை வெளியான பிறகு நமக்கும் பல தகவல்கள் கிடைத்தன. அவற்றில் ஒரு குறிப்பிட்ட நபர் பல டுபாகூர்களை தன்னுடன் சேர்த்து வைத்துக் கொண்டு ஆங்காங்கே பணம் பறிப்பதாகவும், அதற்கு தங்களை செய்தியாளர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்வதாகவும் விவரம் கூறினார்கள். விஷயம் இப்படியிருக்க பிளாக்மெயில் செய்து அப்பாவிகளிடமும், அதிகாரிகளிடமும் பணம் பறிக்கும் செய்தியாளர்கள் பற்றி விவரம் சேகரிக்கும் பணி முக்கால் பாகம் முடிந்துவிட்டது. அப்பணிகள் முழுமையாக முடிவடைந்தவுடன், அடுத்தகட்டமாக புகார் தயாரித்து உரிய அதிகாரிகளுக்கும், சம்மந்தப்பட்ட செய்தி நிறுவனத்துக்கும் அளிக்கப்படும். இந்த பணிகளை என்.ஜே.யூ. மேற்கொண்டு செய்து வருவதற்காக என்ன மாதிரியான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதும் தெரிந்ததே. அவற்றை சமாளிக்கும் விதத்தை நாமும் அறிந்ததே. இதனால் பல செய்தியாளர்கள் கலக்கமடைந்து காணப்படுகின்றனர். முழுமையாக களையெடுக்க நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது...

No comments
Thank you for your comments