வேலூர் மாநகராட்சி சீரிய பணியாற்றும் கமிஷ்னர்! முட்டுக்கட்டை போடும் மதிவாணன்!!
வேலூர், ஜூன் 8-
வேலூர் மாநகராட்சிக்கு திறம்பட பணியாற்றக் கூடிய கமிஷனரை நியமித்தும் அவரை பணி செய்ய விடாமல் தடுத்து முட்டுக்கட்டை போடுகிறார் உதவி கமிஷனர் மதிவாணன்.
ஏதோ ஒரு புண்ணியத்துல அரசாங்கம் வேலூர் மாநகராட்சிக்கு ஒரு நல்ல கமிஷனரை நியமித்திருக்கிறது. வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சிக்குட்பட்டு மொத்தம் நான்கு மண்டலங்கள் உள்ளன. அதில் 1&ல் செந்தில்குமார், 2-ல் மதிவாணன், 3-ல் வெங்கடேசன், 4-வது மண்டலத்துக்கு பிரபு என்பவர்கள் உதவி ஆணையர்களாக உள்ளனர். மேற்கண்ட நால்வரில் சிலர், “போன மாட்டை தேடுவதில்லை, வந்த மாட்டை கட்டுவதில்லை”. இந்த பாணியில்தான் அவர்கள் சம்பளம் கிம்பளமுமாக சொகுசு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
![]() |
| ஆணையர் சங்கரன் |
இந்த கொரோனா காலத்தில் கூட சற்றும் மனசாட்சியில்லாமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கடை நிலை தூய்மைப் பணியாளர்கள் தங்கள் உயிரையும் துச்சமென நினைத்து காலை ஆறு மணிக்கெல்லாம் பணிக்கு வந்து கடமையாற்றிக் கொண்டிருக்க, மேற்படி உதவி ஆணையர்களில் சிலர் வீட்டை விட்டு வெளியே கூட வருவதில்லை. உட்கார்ந்த இடத்திலிருந்து பெரிய மனிதர்கள் போல் தொழிலாளர்களை விரட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தகவல் காட்டுத்தீ போல் வேலூர் மாநகரில் பரவி வருகிறது.
![]() |
| உதவி ஆணையர் மதிவாணன் |
அதே வேளையில் கொரோனா பெயரால் பயங்கரமான ஊழல்களையும் செய்து வருகிறார்கள். குறிப்பாக, சானிடேஷன் விஷயத்தில் கூட்டுக் கொள்ளை அடிக்கிறார்கள் என்றால் மிகையாகாது. பல வார்டுகளில் கிருமி நாசினி இதுநாள் வரை தெளிக்கவே இல்லை என்பதுதான் நிதர்சனம்.
இவைற்றையெல்லாம் கேள்விப்பட்ட புதிய கமிஷனர் சங்கர் உதவி ஆணையர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விரட்டி விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருக்கிறார். உதாரணத்துக்கு ஒரு உதவி ஆணையரை காலை ஆறு மணிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட கமிஷனர் அவரை எங்கு இருக்கிறார் என்று கேட்டு தெரிந்துக்கொண்டு உடனடியாக பீல்டு ஒர்க்கை தொடங்குங்கள் என்று முடுக்கி விட்டிருக்கிறார்.
இதையறிந்த மாநகராட்சி ஊழியர்கள் சிலர் கமிஷனரை மனதார வாழ்த்துகிறார்கள். இந்த விஷயத்தை அறிந்த மற்ற உதவி ஆணையர்கள் இதுவரை நம்மை யாரும் கேள்வி கேட்டதில்லை, புதிதாக வந்துள்ள கமிஷனர் இப்படி நம்மை வேலை வாங்குகிறாரே என்று கூடி பேசி சதிதிட்டம் ஏதோ தீட்டுகின்றார்களாம்.... இந்த தகவல்கள் ஒரு புறம் மாநகரில் உலா வந்து கொண்டுள்ளது.
இது குறித்து ஊழியர்கள் சிலரிடம் பேசிய போது சில விவரங்களை குறிப்பிட்டனர். அதாவது உதாரணத்துக்கு 2&வது மண்டலத்தை எடுத்துக்கொள்ளுங்கள் சார், அவர் ரொம்ப கில்லாடியான ஆள். கழுவுற மீன்ல நழுவுற ஆளு. எந்த ஒரு பப்ளிக் ஒர்க்குலேயும் கமிஷன் இல்லாமல் செய்ய மாட்டார். அதே மாதிரி யாராவது வைட்டமின் “ப” வை நீட்டினால் போதும் என்னவேண்டுமானாலும் செய்வார் அவர். அந்தளவுக்கு பெயர் போனவராம் பலே கில்லாடியான மதிவாணன். சத்துவாச்சாரி பகுதி இரண்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றுபவர்கள் மற்றும் 59&வது தெருவில் மூன்றாவது குறுக்கு தெருவில் ஒரு வீட்டில் இருந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பிரச்சனை ஏற்பட்டது. அங்கு மதிவாணன் எட்டிக்கூட பார்க்கவில்லை. கிருமி நாசினி தெளிக்கவில்லை. தடுப்பு ஏதும் போடவில்லை.
அது மட்டுமின்றி மதிவாணனின் அதிகார எல்லைகுட்பட்ட பகுதிகளில் மாடியில் நீச்சல் குளம் கொண்ட பங்களா மற்றும் அண்டர் கிரவுண்டு கொண்ட வணிக வளாகங்கள் மற்றும் பல அடுக்குமாடி கட்டடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டு வருகிறது. அதற்கெல்லாம் பெரும் தொகை பெற்றுக் கொண்டு கண்டு கொள்ளாமல் உள்ளார் அவர்.
இது பற்றியெல்லாம் புது கமிஷனர் சங்கருக்கு தெரியவந்த நிலையில் மதிவாணனை பணியிடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. மதிவாணனுக்கு பதிலாக பெண் உதவி ஆணையரை நியமிக்கவும் முடிவானதாக கூறப்படுகிறது. (அந்த பெண் ஆணையர் திருப்பத்தூர் நகராட்சி ஆணையராக இருந்தவர். பெயர் சுதா ரொம்பவே நேர்மையானவராம். தற்போது வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அவரைத்தான் 2&ம் மண்டலத்துக்கு நியமிக்க முடிவானது.
இதையறிந்த மதிவாணன் யாரையோ பிடித்து தனக்கு வந்த பணியிடமாற்றத்தை தடுத்து நிறுத்திக் கொண்டாராம். இதனால் கமிஷனர் சங்கருக்கு நஷ்டம் ஏதுமில்லை. ஆனால் 2&வது மண்டல வாசிகளுக்குத்தான் பெருத்த ஏமாற்றம். மதிவாணனுக்காக சிபாரிசு செய்த பெரிய மனிதர்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தால் மக்கள் அவர்களுடைய மனதில் அதை நன்கு கவனம் வைத்துக் கொள்வார்கள்.
வேலூர் மாநகராட்சிக்கு இதுவரை கிடைக்காமல் கிடைத்திருக்கும் நல்ல கமிஷனர் வாயிலாக, நாற்றம் பிடித்த நான்கு மண்டலங்களுக்கு விடிவு கிடைக்கும் என்று நினைத்த மக்களுக்கு மதிவாணன் போன்ற உதவி ஆணையர்களால் தடைபடுகிறது.
ஒரு உயர் அதிகாரி நடவடிக்கை எடுக்கிறார் என்றால் அவரையே ஓவர்டேக் செய்து அதற்கு செக் வைக்கும் அளவுக்கு செல்வாக்கு படைத்தவர்களாக இருக்கும் மக்கள் விரோதப் போக்கு அதிகாரிகளை அரசு சிறிதேனும் கண்டுகொள்ள வேண்டும். மேலும் யாரெல்லாம் ஊழல் பெருச்சாலிகள் என்கிற லிஸ்டும் தயாராகி வருகிறதாம்.
நிலைமை இப்படி இருக்க மாநகராட்சி ஆணையர் சங்கர் முறைகேடாக நடத்தப்படும் இறைச்சிக்கடைகளை ரவுண்டு கட்டி சோதனை செய்து அபராதம் விதித்து வருகிறார். இந்நிலையில் நேற்று (7&ம் தேதி) விருதம்பட்டில் உள்ள மாட்டிறைச்சி கடைகளை உட்பட பல இடங்களில் பார்வையிட்டு அபராதம் விதித்துள்ளார்.
இந்த மாதிரி ஒரு கமிஷனரை வேலூர் மாநகராட்சிக்கு நியமித்தமைக்கு பொதுமக்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறார்கள். இந்த கமிஷனரை எப்படியாவது மடக்கி தங்கள் கைக்குள் கொண்டு வர வேண்டும் என்று உதவி கமிஷனர் மதிவாணன் தனது தகிடுதத்தங்களை கட்டவிழித்து விட்டுள்ளார். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும் என்பது இதிலும் நிரூபணமாகும். விழிப்புடன் செயல்பட வேண்டிய தருணத்தில் வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கர் மக்கள் பணியை மகேசன் பணியாக செய்து வருவது பாராட்டுக்குரியது....!



No comments
Thank you for your comments