பத்திரிகைகளில் பணியாற்றாதவர்களுக்கும் இலவச பயண அட்டைகளை வழங்கிய கொடை வள்ளல்!
வேலூர், செப். 30, 2018:
பத்திரிகைகளில் பணியாற்றாதவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச பயண அட்டைகளால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை கண்டும் காணாமல் அமைதி காத்து வரும் மாவட்ட ஆட்சியரால் இப்படி அதிகார துஷ்பிரயோக செயல்களில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஈடுபட்டுள்ளது வெட்டவெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தின் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக பணியாற்றி வருபவர் இளங்கோவன். இவர் என்று வேலூர் மாவட்டத்தில் அடியெடுத்து வைத்தாரோ அன்று முதல் இன்று வரை பத்திரிகைகளுக்கு சரிவர புகைப்படம் மற்றும் செய்திகள் அனுப்பியதில்லை. அலுவலகத்தில் இருப்பதே இல்லை. பல பத்திரிகையாளர்கள் தமிழக அரசு செய்தித்துறை சார்பில் செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்களுக்கு வழங்கும் இலவச பேருந்து பயண அட்டை மற்றும் ஊடகம் ஸ்டிக்கர் போன்றவற்றை வழங்க கோரி விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால் இவர் பல ஆர்என்ஐ சான்றிதழ் பெற்றுள்ள உண்மையான பத்திரிகையாளர்களுக்கு எந்தவித அரசு சலுகைகளையும் சரி வர வழங்குவது இல்லை. மாறாக யார் ÔபÕ வைட்டமின் கொடுக்கிறார்களோ, உற்சாக பானம் வாங்கி தருகின்றனரோ அவர்களுக்கு வரையறையின்றி இலவச பேருந்து பயண அட்டை மற்றும் ஊடகம் ஸ்டிக்கர் போன்றவற்றை தன் விருப்பம்போல வாரி வழங்கியுள்ளார்.
இதுகுறித்து ஒரு செய்தியாளர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக கேள்வி கேட்டு பதில் பெற்றுள்ளார். அதில் 104 பேருக்கு இலவச பயண பேருந்து அட்டைகள் 2018ம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையிலேயே தினசரி வெளிவரும் பத்திரிகைகளுக்கு அரசு வழங்கும் சலுகைகளை பெற 3 ஆண்டுகள் ஆக வேண்டும் என்றும், ஆர்என்ஐ சான்றிதழ் பெற்று நடைமுறையில் உள்ளதா? தினமும் நாளிதழ் வெளிவருகிறதா? அரசு செய்திகள் தினமும் பிரசுரமாகிறதா? என்று அலசி ஆராய்ந்து பார்த்து விட்டு பின்னர்தான் தரமுடியும், அரசு வழங்கும் சலுகைகளை பெற முடியும் என்று வீரவசனம் பேசியவர், இப்போது 104 பேருக்கு இலவச பயண பேருந்து அட்டைகளை வழங்கியுள்ளாரே!. இந்நிலையில் அவர் சொன்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா?. செய்தியாளர்கள் இல்லாத பத்திரிகைகள், ஆர்என்ஐயில் தடை செய்யப்பட்ட பத்திரிகைகளுக்கும், ஆர்என்ஐ இல்லாதவர்களுக்கும், வெளிவராத பத்திரிகைகள், தடை செய்யப்பட்ட பத்திரிகைகள், தற்போது வெளிவந்து 4 மாதங்கள் ஆன பத்திரிகைகள் போன்றவற்றுக்கு எப்படி இலவச பேருந்து பயண அட்டை வழங்கியுள்ளார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்படி என்றால் ஒரு இலவச பயண பேருந்து அட்டை தருவதற்கு தலா ரூ.2 ஆயிரம் பெற்றுக் கொண்டு அந்த அரசு சலுகைகளை கொடுத்து விட்டு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளார். இலவச பயண பேருந்து அட்டைகள் விஷயத்திலேயே இவ்வளவு தில்லாலங்கடி வேலைகள் செய்தவர், சமீபத்தில் செய்தியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களில் எவ்வளவு முறைகேடுகள் செய்திருப்பாரோ என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் என்று செய்தியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அரசு செய்தித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தினால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என்று செய்தியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
சமீபத்தில் ஒரு நாளிதழுக்கு ரெகுலரேஷன் சான்றிதழ் கோரி மாவட்ட ஆட்சியர் ராமனிடம் மனு கொடுத்தனர். ஆனால் அந்த செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இளங்கோவன் இதுபோன்ற சான்று கொடுக்க இயலாது என்றும், இதுபோன்ற அரசாணை எதுவும் இல்லை என்றும் நிராகரித்து விட்டார். ஆனால் மத்திய அரசு இணையதளத்தில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சான்றிதழ் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணை என்ன உள்ளது என்பது கூட இவருக்கு தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். ஆர்என்ஐ சான்றிதழுக்கு தர வேண்டிய கடிதத்தை கூட தர மாட்டேன் என்று ஓட்டம் பிடித்தவர்தான் இந்த வாய்ச்சொல்லில் வீரராவார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இளங்கோவன் இந்த அலுவகத்துக்கு வரும் பொதுமக்கள், செய்தியாளர்கள், அரசு அதிகாரிகளையும், மாவட்ட ஆட்சியரையும் யாரையுமே இவர் மதிப்பது இல்லை. யார் பேச்சையும் கேட்பது இல்லை. தான்தோன்றித்தனமாக செயல்படுகிறார். நானே ராஜா, நானே மந்திரி என்று செயல்படுகிறார். தலைக்கனத்துடன் நடந்து கொள்கிறார். மாவட்ட ஆட்சியர் ராமனே பிஆர்ஓ இளங்கோவனை கண்டு அஞ்சி நடுங்குகிறார். இது ஏன்?. இப்போதுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் என்றும், முதல்வர் எடப்பாடியின் பினாமி என்றும் இவர் சொல்லிக் கொண்டும், எனது சாதிக்காரர் என்று சொல்லிக் கொண்டும், நான் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெனாவெட்டாக கூறிக்கொண்டு வலம் வந்து கொண்டுள்ளார்.
இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் இவர் மீது செய்தியாளர்கள் பல புகார்களை செய்தித்துறை இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளனர். இவரது தில்லாலங்கடி வேலைகள் தொடர்பாக செய்திகள் பல நாளிதழ்கள், வார இதழ்களில் வெளிவந்து கொண்டுள்ளது. இதுநாள் வரையிலும் இவர் மீது எந்தவித நடவடிக்கையும் மாவட்ட ஆட்சியரும், செய்தித்துறை அமைச்சரும், செய்தித்துறை இயக்குநர் சங்கரோ இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இளங்கோவன் சொல்வது போன்று எடப்பாடி பழனிச்சாமியின் பினாமியா? அல்லது உறவினரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்காக இவரைப் பார்த்து அஞ்சி நடுங்குகின்றனரா என்று செய்தியாளர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.
தருமபுரியில் இதற்கு முன்னர் பணிபுரிந்தபோது செய்தியாளர்களிடம் இதே பிரச்சனைகள்தான் ஏற்பட்டுள்ளது. அங்கு ஒரு பெண் செய்தியாளரிடம் முறைதவறி பேசியதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிய இவருக்கு எவ்வித தகுதியும் இல்லை என்று செய்தியாளர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது..
ஆர்என்ஐ அங்கீகாரம் பெறாத பத்திரிகைகளுக்கு சில உள்ளூர் அரசு விளம்பரங்கள் கொடுத்து விட்டு பில் தொகையில் 30% லிருந்து 40% வரை கமிஷன் கேட்கிறார். யார் கமிஷன் தருகிறாறோ அந்த நாளிதழுக்கு அரசு விளம்பரங்கள் தரப்படுகிறது.
அரசு விழாக்களில் கலந்து கொள்ளும் செய்தியாளர்களுக்கு விழா ஏற்பாட்டாளர்கள் தரும் சன்மானத்தை செய்தியாளர்கள் பெயரை சுட்டிக் காட்டி விட்டு மொத்த பணத்தையும் பொய்யான கணக்கெழுதி விட்டு செய்தியாளர்களுக்கு கொடுத்து விட்டதாக கணக்கு காண்பித்து மலைமுழுங்கி மகாதேவன் போல் செயல்பட்டு வருகிறார்.
இவர் எப்போதும் தனது இருக்கையில் இருப்பதே இல்லை. அரசு இவருக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிப்பில் வீடு வழங்கியுள்ளது. ஆனால் சத்துவாச்சாரியில் ஒரு பங்களாவை ரூ.10 ஆயிரத்துக்கு வாடகை எடுத்து தங்கியுள்ளார். அந்த பங்களாவில் எப்போதும் சொகுசாக, ஆனந்தமாக சோமபானம், சுரா பானங்கள் அருந்தி ராஜ போக வாழ்க்கை உல்லாசமாக வாழ்ந்து வருகிறார் என்று செய்தியாளர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. இவரை பார்க்க வேண்டும் என்றால் அங்கு சென்றால் பார்த்து கொள்ளலாம்.
மற்றொருபுறம் பார்த்தால் பல செய்தியாளர்கள் தாங்கள் ஏற்கனவே வாங்கிய வீட்டுமனைகளை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்து விட்டனர். இந்நிலையில் இப்போது விடுபட்டவர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டி அரசு தயாரிக்கும் பட்டியலிலும் அதே ஊழல் பெருச்சாலிகள் மீண்டும் தங்கள் பெயரை கொடுத்துள்ளனர்.
குறிப்பாக மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளும் விழாக்களின் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை சரிவர பத்திரிகைகளுக்கு அனுப்புவதே இல்லை. மாறாக பிடிஎஃப் எனப்படும் ஃபைல்கள், ஸ்கேன் காப்பிகளை மட்டுமே அனுப்பி விட்டு சென்று விடுகிறார். பிஆர்ஓ வின் இச்செயலால் கொதிப்படைய வேண்டிய முதல் நபரே மாவட்ட ஆட்சியராகத்தான் இருக்கவேண்டும், ஏனென்றால் மாவட்டத்தில் நடைபெறும் பணிகள் மற்றும் செயல்கள் என அவருடைய பணி புகைப்படம் மற்றும் செய்திகளை வெளியிடுவதே பிஆர்ஓவின் முதன்மையான பணியாகும். இவ்வாறு இருக்கையில், ஏன் ஒரு புகைப்படம் கூட வெளியாகவில்லை என்று இதுநாள் வரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளங்கோவனை மாவட்ட ஆட்சியர் ராமன் கேட்டதே இல்லையா...!. இச்செயல் இவருடைய பெருந்தன்மையா? இயலாமையா? என்ற கேள்வி நம்முன்னே எழுகின்றது.
இவர் என்று மாற்றப்படுகிறாரோ அல்லது இவர் மீது என்றைக்கு துறைரீதியான விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறாரோ அப்போதுதான் வேலூர் மாவட்டத்துக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும். அதுவரை என்னதான் நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பிஆர்ஓ-வின் இருட்டடிப்பு செயல்கண்டு
மாவட்ட ஆட்சியர் அமைதி காப்பது பெருந்தன்மையா? இயலாமையா?


No comments
Thank you for your comments