இந்தோனேஷியாவில் 6.2 ரிக்டார் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேஷியாவில் சற்று முன்னர் 6.2 ரிக்டார் அளவில் சக்தி வாய்ந்த
நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
இந்தோனேஷியாவில் உள்ள Lombok என்ற
தீவிலிருந்து சுமார் 190 மைல்களுக்கு அப்பால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க
புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் Praya நகரிலிருந்து சுமார்
300 கி.மீ தொலைவில் 29 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக
தெரிவித்துள்ளது.
எனினும், இது சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக இருந்தாலும் கூட, அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் மற்றும் சேதாரங்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
No comments
Thank you for your comments