மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பட்டாசு வெடிக்கத் தடை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரள கோவிலில் நடந்த பட்டாசு விபத்தினை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை தெரிவித்தள்ளது. சித்திரை திருவிழாவின் போது, மீனாட்சி அம்மன் நான்கு மாசி வீதிகளிலும் வலம் வரும் போது, பட்டாசு வெடிப்பது வழக்கம்.
அண்மையில் கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள புட்டிங்கல் கோவில் திருவிழாவின் போது பட்டாசு வெடி விபத்தில் 114 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மீனாட்சியம்மன் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதே போல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவார்கள் என்பதால், அன்றும் பட்டாசு வெடிக்க காவல் துறை தடை விதித்துள்ளது.
No comments
Thank you for your comments