Breaking News

அதிமுகவில் இணைந்தார் நடிகை நமீதா

சென்னை, ஏப்.25-
இரும்பு பெண்மணியாக இருக்கும் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆளுமை திறன் பிடித்துவிட்டதால் அதிமுக கட்சியில் இணைந்துள்ளேன் என நடிகை நமீதா கூறியுள்ளார்.

நான் அரசியலுக்கு வருவேன் என நீண்ட மாதங்களாக தண்டோரா போட்டு வந்த நமீதா,
சமீபத்தில் அதிமுக கட்சியில் இணைந்து அரசியல் உலகில் மட்டுமன்றி சினிமா வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் எதற்காகஅதிமுக கட்சியில் இணைந்தேன் என்பது குறித்து அவர் கூறியதாவது, புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சிமுறை, அவரது தலைமை, எந்த சோதனையிலும் உறுதியாக நிற்கும் இரும்புப் பெண்மணி என்ற அவரது இமேஜ் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

எனது முதல் அரசியல் வழிகாட்டியாக அவரைத்தான் நான் நினைக்கிறேன். அதனால் தான் அதிமுகவில் சேர்வது முடிவு செய்துவைத்திருந்தேன்.

நானே விரும்பி கடிதம் கொடுத்தேன். அம்மாவின் அழைப்புக்காகக் காத்திருந்தேன். அதிமுகவில் நானும் ஒரு அங்கமாகிவிட்டேன்,

மேலும், நான் வசிப்பது தமிழ்நாடு, என்னுடைய ரேசன் கார்டு இங்கு தான் உள்ளது, தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என ஆசைப்பட்டேன், எனவே அரசியலில் இணைந்துள்ளேன் எனக்கூறியுள்ளார்.

No comments

Thank you for your comments