மூத்த குடிமக்கள் சுமூகமாக வாக்களிக்க நடவடிக்கை: சென்னை ஆணையரின் புதிய முயற்சி
சென்னை, ஏப்.27-
தமிழகத்தில் எதிா்வரும் சட்டசபை தோ்தலில் மூத்த குடிமக்கள் வாக்களிக்க, அவா்களை ஊக்குவிக்கும் வகையில், சென்னை மாநகராட்சி ஆணையர் பி சந்திர மோகன், YWCA என்னும் மூதியோா் இல்லத்தில் வசிக்கும் ஆதரவற்ற 35 மூத்த குடிமக்களுக்கு வாக்காளா் அட்டை வழங்கியுள்ளாா்.
இந்நிகழ்வின் போது பேசிய சந்திர மோகன், வாக்களிப்பது ஒரு குடிமகனின் ஜனநாயக உரிமை, அது ஊனமுற்றோருக்கும், மூத்த குடிமக்களுக்கும்
உள்ளது.இந்நிகழ்வின் போது பேசிய சந்திர மோகன், வாக்களிப்பது ஒரு குடிமகனின் ஜனநாயக உரிமை, அது ஊனமுற்றோருக்கும், மூத்த குடிமக்களுக்கும்
மேலும், வாக்குச் சாவடியில் மூத்த குடிமக்களுக்கு ஏற்றவரும், சுமூகமாக வாக்களிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்நிலையில், தோ்தலில் இதுவரை வாக்களிக்க முடியாத நிலையில் இருந்த மூத்த குடிமக்கள் பலா் சந்திர மோகனுக்கு வாழ்த்து தொிவித்துள்ளனா்.
இதன்போது வாக்காளா் அட்டை பெற்ற விசா ரவிதரன் கூறுகையில், முந்தைய காலத்தில், எங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா் மற்றும் அவா்களின் கட்சியை எனக்கு நன்றாக தொியும்.
ஆனால், தற்போதைய காலத்தில் கட்சி உறுப்பினா்களுக்கே அவா்களின் வேட்பாளா் குறித்து அறியாத நிலையே உள்ளது.
வேட்பாளார்கள் மக்களிடம் நெருங்கிய தொடா்பில் இருக்க வேண்டும், அப்பொழுது தான் அவா்களின் மக்களின் நம்பிக்கைக்கு உத்திரவாதமாக இருக்க முடியும் என கூறியுள்ளாா்.
மேலும், இலவச திட்டங்களை வைத்த மக்கள் ஒரு கட்சியை ஆதரிக்க கூடாது ,மாறாக அந்த கட்சியின் வரலாற்றை அறிந்து அதற்கு ஆதரவு அளிப்பதே சிறந்தது என மூத்த குடிமக்களில் பலா் கருத்து தொிவித்துள்ளனா்.
YWCA-வின் பொதுச் செயலாளர் ரேச்சல் ஜக்கோப் கூறுகையில், இதுவரை நான் வாக்கு அளிக்க தவறியதில்லை. அது என் உரிமையை விட, என் கடமையாகவே கருதுகிறேன், கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க விரும்பாதவாகள் நோட்டாவை தோ்வு செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளாா்.
No comments
Thank you for your comments