சென்னை கஸானா நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு
சென்னை, ஏப்.21-
சென்னையில் 1989ம் ஆண்டு கஸானா நிறுவனத்தின் முதல் நகைக்கடை
துவக்கப்பட்டது. 2012ம் ஆண்டுக்குள் ஆந்திரா, கர்நாடகா, தமிழகத்தில்
20க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.
கஸானா குழும நிறுவனங்கள் கடந்த இரண்டு வருடமாக வருமான வரி கட்டவில்லை
என்ற புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் இன்று வருமானவரித்துறை அதிகாரிகள்
அந்த குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டனர்.
நகைக்கடைகள், அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments
Thank you for your comments