Breaking News

அடுத்த கட்ட தேர்தலுக்கு தயாரான ஹிலாரி கிளிண்டன்

அமெரிக்கா, ஏப்.21-
அமெரிக்க அதிபர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க நியூ யார்க்கில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஹிலாரி கிளிண்டன் அடுத்த தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதற்காக ஜனநாயகக் கட்சி
மற்றும் குடியரசுக் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

இந்த வேட்பாளர்களில் நாடு முழுவதும் நடக்கும் முதன்மைத் தேர்தல்களில் அதிக வாக்குகள் பெறுபவர்கள் அதிகாரப்பூர்வமான வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள்.

இந்நிலையில், நியூ யார்க்கில் நடந்த முதன்மைத் தேர்தலில் ஜனநாயக் கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளிண்டன் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

இதைத் தொடர்ந்து  பென்சில்வேனியா தேர்தலிலும் வெற்றி பெற ஹிலாரி கிளிண்டன் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். பென்சில்வேனியாவில் உள்ள பிலடெல்பியாவில் வரும் 26 ஆம் தேதி அதிபர் பதிவிக்கான வேட்பாளர் தேர்தல் நடைபெறவுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments