கழுதைகளுக்கு திருமணம் செய்தால் மழை வருமா?
கர்நாடகா, ஏப். 04-
காற்று, மழை, நெருப்பு, கல்வி, காதல், வீரம் என இயற்கையின் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு
மழை கடவுளான வர்ணனுக்கு வழங்கும் படையலாகவே விலங்குகளின் இந்த திருமணம் நடக்கிறது. மதம் சார்ந்த புரோகித மந்திரங்கள் முழங்கவே இதை நடத்துகின்றனர்.
கழுதைகளுக்கு திருமணம்
கர்நாடகாவில் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயிகள் உட்பட்ட மக்கள் பருவமழை காலத்தில் மழைபெய்ய சுணக்கம் ஏற்படும்போது கழுதைகளுக்கு திருமணம் செய்யும் வழக்கம் வைத்துள்ளனர்.
ஒரு ஜோடி கழுதைகளை கொண்டுவந்து, குளிப்பாட்டி, அதற்கு புத்தாடை உடுத்தி, புது மலர்மாலைகள் சூட்டி, மேலும் சில அலங்காரங்கள் செய்து, அந்த கிராமத்தையே சுற்றி ஊர்வலமாக அழைத்து வருகின்றனர்.
பிறகு, கோவில் வாசலில் இரண்டு கழுதைகளையும் ஒன்றாக நிறுத்தி ஊரார் கூடிநிற்க, குருக்கள் மந்திரங்கள் சொல்ல, தாலி கட்டுகின்றனர். திருமணம் முடிந்ததும், கழுதைகள் ஒன்றுசேர ஒரு கூடத்தில் விட்டுவிடுகின்றனர்.
பாத்ராவதி வட்டத்தில் உள்ள தேவ்ரா, நர்சிபுரா கிராம மக்களும் மழைக்காக கழுதைகளுக்கு திருமணம் செய்கின்றனர்.
தவளைகளுக்கு திருமணம்
சோரப் அருகே பொம்னஹள்ளி ஊர் மக்கள் மழை வேண்டி கடவுளுக்கு விருந்தாக தவளைகள் திருமணத்தை நடத்துகின்றனர்.
இதற்காக ஒரு ஜோடி தவளைகளை பிடித்து வந்து அதை ஒருவர் கைகளில் வைத்திருக்க மதகுருக்கள் திருமண மந்திரம் சொல்கிறார். பிறகு, ஆண் தவளை சார்பாக பெண் தவளைக்கு அவர்களால் தாலி கட்டப்படுகிறது.
பிறகு, இரண்டு தவளைகளையும் முகூர்த்த சடங்குக்காக, ஒரு தொட்டிக்குள் விட்டுவிடுகின்றனர்.
வினோத திருமணங்கள்
மழை பிரார்த்தனை காரணம் இல்லாமல் தங்களுடைய செல்லப்பிராணியான வளர்ப்பு நாய்க்கு திருமணம் செய்துபார்க்கும் ஜீவகாருண்யர்களும் உண்டு.
அப்படிப்பட்ட திருமணங்கள் நாய்களுக்கே அதிகம் நடக்கிறது. அந்த திருமணங்களில் நாய்களை விட அதன் எஜமானர்கள்தான் அதிகம் மகிழ்ச்சியடைகின்றனர்.
குதிரை, முயல், பன்றி என இப்படி திருமணம் செய்துவைக்கப்படும் விலங்குகளின் பட்டியல் நீள்கிறது.
மனிதர்களே விலங்குகளை திருமணம் செய்துகொள்ளும் வினோதங்களும் எப்பொழுதாவது செய்தியாக வந்து, உலகம் இவ்வளவுதான் என்ற விரக்தியை தருகிறது.
கழுதை திருமணத்தால் மழை வருமா?
ஏமாற்றும் நோக்கம் மட்டுமின்றி, மூடப்பழக்கங்கள் பெரிய உள்நோக்கம் ஏதும் இல்லாமலும் உருவாகிறது. அதற்கு மழை காரணத்துக்கான விலங்குகள் திருமண வழக்கம் நல்ல உதாரணம்.
தவளைகள் மழைக்காலத்தில் சப்தமிடுவதாலும், கழுதைகளின் அவலட்சணம் கருதியும் இந்த விலங்குகள் திருமண சடங்கிற்கு தேர்வாகியிருக்கலாம்.
மூடப்பழக்கங்களின் பலவீனமே, சிந்திப்பவர்களையும் நம்பவைக்கும் அளவிற்கு அதற்கு பொய்சொல்ல தெரியாமல் இருப்பதுதான்.
விலங்குகள், அவைகளின் வழக்கப்படி திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துதான் இனத்தை பெருக்குகின்றன. அதில் ஒரு ஜோடிக்கு மட்டும் மனிதர்கள் திருமணம் செய்துவைப்பதால் இயற்கையில் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடும்.
மழையின்றி வறட்சியால் காய்ந்த மக்கள், எதை தின்றால் பித்தம் தெளியும் என்று எதை சொன்னாலும் நம்ப தயாராயிருந்த சூழலில் யாரோ துவக்கிவிட்ட இந்த யோசனை தொடர்ந்துவிட்டது.
ஒரு பழக்கத்தை மூடநம்பிக்கை, என்று தடுத்துவிட்டால், அது மதம் சார்ந்த பல வழக்கங்களையும் சமூகம் கைவிடுவதற்கு முன்னுதாரணம் ஆகிவிடும் என்ற முன்யோசனையில் பழமை வாழ பணிசெய்பவர்களும் உண்டு.
ஒரு கிராமம் பின்பற்றுகிற வழக்கங்களில் இருந்தே, அது பின் தங்கியிருப்பதற்கான காரணங்களையும் அறிய முடிகிறது.
No comments
Thank you for your comments