திருபுவனை தொகுதி மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்களா?
புதுச்சேரியில் கிராமப்புறங்களை உள்ளடக்கிய தொகுதியில் திருபுவனை தனி தொகுதி மிகவும் பழமை வாய்ந்தது. தொகுதியில் 30 ஆயிரத்து 336 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். ஏற்கனவே இங்கு அதிகபட்சமாக காங்கிரஸ் 5 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 4, திமுக 2 முறை வென்றுள்ளன. கடைசியாக 2011ல் நடந்த தேர்தலில் என்.ஆர்.காங்., எம்எல்ஏ அங்காளன் வெற்றி பெற்றார். இதன் மூலம் வெற்றியாளர்கள் வரிசையில் என்.ஆர்.காங்கிரசும் இடம் பிடித்தது. தற்போதைய எம்எல்ஏவான அங்காளன் 3வது முறையாக மக்கள்
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் முதியோர் உதவித்தொகை பிரச்னை உள்ளிட்ட சில பிரச்னைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டார். அதன் பிறகு முதல்வர் ரங்கசாமி அவரை சமாதானப்படுத்தினார். இதற்கு பின்னால் அரசின் அடிப்படை திட்டங்கள் உடனுக்குடன் சென்றடைந்தன. இருப்பினும் தொகுதியில் மாட்டுச் சந்தைக்கு கட்டட வசதியில்லாமை, இலவச மனைப்பட்டா, சுடுகாடு வசதிகள் செய்யப்படாமல் இருப்பது, ஏரிகள் ஆக்கிரமிப்பு, தொழிற்சாலைகள் அழிவு பாதையில் செல்வது உள்ளிட்ட பிரச்னைகள் நீடிக்கின்றன.
தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் இல்லாதது ஏமாற்றத்துக்குரியது. தற்போது அங்கு மீண்டும் போட்டியிட அங்காளன் தயாராகி வருகிறார். ஆனால் அவருக்கு போட்டியாக என்.ஆர்.காங்கிரசில் முன்னாள் எம்எல்ஏ மணியன் வாரிசான மதகடிப்பட்டு தண்டபாணி, ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான அன்பழகன் ஆகியோர் சீட்டு கேட்டு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஸ்பின்கோ அதிகாரியாக இருந்த அன்பழகன் ஆதிதிராவிட நலத்துறையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் போட்டியிட இவர் தயாராக களத்தில் குதிக்க ஆயத்தமாக உள்ளார். இதுதவிர காங்கிரசில் தனி தொகுதிக்கு போட்டா போட்டி நிலவுகிறது.
வட்டார காங்கிரஸ் செயலாளர் வெங்கடேசன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா, முத்துவேல், கோபி, மணிவண்ணன், மணிமாறன், வேலு, தீனன், சிவா, நடராஜன், சந்திரன் இவர்களுடன் அதிமுகவில் இருந்து ஒதுங்கி இருக்கும் முன்னாள் எம்எல்ஏ அரசி ஆகியோரும் விருப்ப மனு அளித்துள்ளனர். திமுகவில் பழனி, அல்லிமுத்து விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மேலும், அதிமுகவில் சபாபதி, காந்தி, முன்னாள் எம்எல்ஏ ஹேமலதா மகன் ரவி ஆகியோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். இதுதவிர மக்கள் நலக்கூட்டணி பாமக, பாஜவிலும் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். என்.ஆர். காங்கிரசில் தற்போதைய சிட்டிங் எம்எல்ஏவான அங்காளனுக்கு எதிராக மக்களின் மநிலை நிலவுகிறது. தொடர்ச்சியாக 3 முறை அவருக்கு தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் வரும் தேர்தலில் மாற்றத்தை காண இளம் வாக்காளர்கள் விரும்புகின்றனர். இதனால் 2016 சட்டசபை தேர்தலில் முன்னாள் எம்எல்ஏக்களின் வாரிசுகள் அதிகளவில் இங்கு களமிறங்க உள்ளனர். குறிப்பாக என்.ஆர்.காங்கிரசில் யாருக்கு சீட்டு என்ற குழப்பம் நிலவுகிறது. இதனால் திருபுவனை தனி தொகுதியில் தேர்தல் களம் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்பாளர்களாக ஆக விருப்பம் தெரிவித்தவர்களுக்கு தேர்தல் ஜூரம் அடிக்க ஆரம்பித்துள்ளது.திருபுவனை தனி தொகுதியை அங்காளன் மீண்டும் தக்க வைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
No comments
Thank you for your comments