பணம் பறிமுதலில் முதல் இடம் தமிழகம்: தேர்தல் ஆணையம்
சென்னை, ஏப்.9-
சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் தமிழகத்தில்தான் அதிக அளவில்
சட்டவிரோத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம்
தெரிவித்துள்ளது.அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தில் முதற்கட்டத்
இந்நிலையில், அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்கும் நோக்கில், பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.
சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படும் பணம், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுகிறது.
அந்த வகையில், 5 மாநிலங்களிலும் இதுவரை மொத்தம் 52 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில், தமிழகத்தில் அதிகபட்சமாக 21 கோடியே 40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு அடுத்ததாக, அஸ்ஸாமில், 11 கோடியே 63 லட்சம் ரூபாயும், கேரளாவில் 9 கோடியே 65 லட்சம் ரூபாயும், மேற்கு வங்கத்தில் 9 கோடி 3 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments