இலங்கையை 2 மாநிலங்களாக பிரிக்க வேண்டும்- கூட்டாட்சி முறை அவசியம்.... வடக்கு மாகாண சபை பரிந்துரை
யாழ்ப்பாணம், ஏப்.8-
இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட இருக்கிறது. இந்த புதிய
அரசியல் அமைப்பில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து வடக்கு மாகாண
சபையில் முதல்வர் வின்கேஸ்வரன் முன்வைத்த அம்சங்கள்:
• இலங்கையில் ஒற்றையாட்சிக்கு பதிலாக கூட்டாட்சி முறை அமுல்படுத்தப்பட வேண்டும்.
• இலங்கை குடிமகன் ஒருவர் மற்றுமொருவருக்கு கீழானவர் என்ற முறை மாற்றப்பட வேண்டும்.
• எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்ககூடிய ஒரு இனம் மற்றைய இனத்தை விட அதிக பலன்களை கேட்க கூடாது.
• வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கும் போது முஸ்லிம் தன்னாட்சி பிராந்திய சபை உருவாக்கப்படும்.
• சிங்கள மொழி மாநிலத்தில் மலையக தமிழர்களுக்காக ஒரு தன்னாட்சிய பிராந்திய சபை உருவாக்கப்பட வேண்டும்.
• வடக்கு, கிழக்கு மாநிலம், வடக்கு, கிழக்கு மாநில நாடாளுமன்றம், வடக்கு
கிழக்கு முஸ்லிம் பிராந்திய சபை மற்றும் மலையக பிராந்திய சபை
ஆகியவற்றுக்கு முழுமையான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.
• தமிழ் பேசும் மாநில அரசில் மத்திய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுநர் என்ற ஒருவருக்கு முழுமையான அதிகாரம் இருக்ககூடாது.
• இலங்கையின் ஆட்சி மொழிகளாக சிங்களமும் தமிழுமாக இருக்க வேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும்.
• வடகிழக்கு மாநிலத்தின் நடவடிக்கைளும் சிங்கள மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்புடன் தமிழ் மொழியில் இருக்க வேண்டும்.
• மலையக பிராந்திய சபையின் பதிவுகள் தமிழிலோ சிங்களத்திலோ இடம்பெறலாம்.
அதில் தமிழ், சிங்கள, ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் இருக்க வேண்டும்.
• வடக்கு, கிழக்கு மாநில மற்றும் முஸ்லிம் மலையக தன்னாட்சி சபைகளின்
சுயாட்சியானது கூட்டாட்சி அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
No comments
Thank you for your comments