Breaking News

இரட்டை வேடம் போடும் மலிங்கா? இலங்கை கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை

Profile Imageஇலங்கை, ஏப்.13-
எங்கள் அனுமதி இல்லாமல் ஐபிஎல் போட்டிகளில் விளையாட கூடாது என்று மலிங்காவுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டி20 உலகக்கிண்ண தொடரில் இலங்கை அணியின் தலைவராக இருந்த மலிங்கா, காலில் ஏற்பட்ட காயம் குணமடையவில்லை என்று கூறி தொடரில் இருந்தே விலகினார்.

இதனையடுத்து மேத்யூஸ்
தலைமையில் களமிறங்கிய நடப்பு சாம்பியனாக இருந்த இலங்கை அணி உலகக்கிண்ணத்தில் முதல் சுற்றுடன் நடையை கட்டியது.

மலிங்காவின் இந்த செயல் இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக விளையாட மலிங்கா தயாராகி வருகிறார்.

இதனால் காயம் விடயத்தில் மலிங்கா ‘இரட்டை வேடம்’ போடுகிறாரோ என்ற சந்தேகம் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் எங்களது அனுமதி இல்லாமல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு விளையாட செல்லக்கூடாது என்று மலிங்காவுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் கிடுக்குப்பிடி போட்டுள்ளது.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் சுமதிபாலா கூறுகையில், “மலிங்கா எங்களது அனுமதி இல்லாமல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடக் கூடாது. அதை மீறி சென்றாலும் அவரால் விளையாட முடியாது. வெளியில் தான் இருக்க வேண்டும்.

அவரது காயத்தன்மை பற்றி ஆய்வு செய்த பிறகே அவருக்கு ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்குவது குறித்து முடிவு செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments