விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட் முடக்கம் - வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிரடி
அமலாக்கத் துறையினரின் கோரிக்கையை ஏற்று, மதுபான ஆலை உரிமையாளர் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது.
பாஸ்போர்ட் சட்டம் பிரிவு 10 (ஏ)-கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் வாங்கியுள்ள ‘சாராய ஆலை முதலாளி’ விஜய் மல்லையா, கடனைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி ஒடி விட்டார். இதுதொடர்பாக வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
இவற்றில் ஐடிபிஐ வங்கியில் ரூ. 900 கோடி கடன் மோசடியில் ஈடுபட்ட வழக்கில், மல்லையா மீது, நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை, அவருக்கு மார்ச் 18, ஏப்ரல் 2, 9 என மூன்று முறை வாய்ப்பு அளித்தது. ஆனால் கடைசிவரை அவர் ஆஜராகவில்லை.
நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவருக்கு அதிகபட்சமாக 3 முறை மட்டுமே சம்மன் அனுப்ப முடியும் என்பதால், அடுத்தகட்ட நடவடிக்கையாக, மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்க அமலாக்கத்துறை முடிவு செய்தது.
மல்லையா மாநிலங்களவை உறுப்பினர் என்ற வகையில், டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் பெற்றுள்ளதால், அதை 1967-ஆம் ஆண்டு சட்டத்தின் படி முடக்க வேண்டும் என்று கடந்த புதனன்று இந்திய வெளியுறவுத்துறைக்கு கடிதமும் எழுதியது.
அதை உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ள வெளியுறவுத்துறை, வெள்ளியன்று மல்லையாவுக்கான பாஸ்போர்ட்டை, பாஸ்போர்ட் சட்டப் பிரிவு 10 (ஏ)-கீழ் முடக்கி உத்தரவிட்டு உள்ளது. தற்போது இங்கிலாந்து நாட்டில் உள்ள மல்லையாவுக்கு இண்டர்போல் மூலம் ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் அளித்து, அவரை இந்தியாவுக்கு கொண்டுவர, வெளியுறவுத்துறையின் இந்த பாஸ்போர்ட் முடக்க நடவடிக்கை பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments
Thank you for your comments