Breaking News

ஐபிஎல் கிரிக்கெட்: குஜராத்துடன் மோதும் மும்பை

மும்பை, ஏப்.16-
http://dimg.zoftcdn.com/s1/photos/news/thumbs/sports/cricket/match/g/gujarat_mumbai001/img/625.320.560.350.160.300.053.800.868.160.90.jpg?a=cஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் குஜராத் லயன்ஸ் மோதுகிறது.

ஐபிஎல் தொடரில் குஜராத் அணி இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும்
வெற்றிபெற்று முதல் இடத்தில் இருக்கிறது.

மெக்கல்லம், பிஞ்ச் ஆகிய வலுவான தொடக்க ஆட்டக்காரர்கள் இருப்பதும், ரெய்னா, பிராவோ, தினேஷ் கார்த்திக், ஜடேஜா என்று வலுவான மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை இருப்பதும் குஜராத் அணியின் பலத்தைக் கூட்டுகிறது.

இதில் ஜடேஜா சமீப காலமாக பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

பந்துவீச்சில் சற்று பலவீனமான அணியாக கருதப்படும் குஜராத், இன்றைய போட்டியில் ஜகதிக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் உமங் சர்மாவை பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

No comments

Thank you for your comments