வாட்ஸ்ஆப்பால் சிக்கிய வானதி சீனிவாசன்
கோவை, ஏப்.16-
கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடுபவர் வானதி சீனிவாசன். இவர் தற்போது பிரசாரத்தில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற விஷூ விழாவில் வானதி கலந்துகொண்டார். பின்னர் தனது தொண்டர்களுடன் கோயிலில் வந்த பக்தர்கள் மற்றும் அப்பகுதியில் இருந்தவர்களிடம் துண்டு பிரசுரங்களை வாக்குகள் சேகரித்தார். அதுமட்டுமின்றி ஆலயம் தொழுவோம் வானதியுடன் என்ற பெயரில் நிகழ்ச்சி மேலும் சில கோயில்களிலும் அடுத்தடுத்து நடைபெற்றது.
இந்நிலையில் சித்தாபுதூர் ஐயப்பன்கோயில் மற்றும் வாசவி அம்மன் கோயில் உள்ளிட்ட சில இடங்களில் கோயில்களில் சென்று அவர் வாக்குகள் சேகரித்தது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக புகார் எழுந்தன.
இதற்கிடையே கோயில் வளாகத்தில் வானதி சீனிவாசன் துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்குகள் சேகரிப்பது போன்ற புகைப்படங்கள் வாட்ஸ் அப்பில் பரவின. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி ருக்மணி கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்தார்.
இதையடுத்து வானதி மீது 3 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
No comments
Thank you for your comments