தேர்தல் விதிமீறல்கள்: இரண்டரை லட்சத்திறக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு
தமிழகத்தில் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு தேர்தல் விதிமீறல்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில்,
தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் வாகன சோதனை செய்யப்பட்டது. அப்போது, 16 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.நாகையில் வாகன சோதனையின் போது, 75 சமையல் எரிவாயு அடுப்புகளும், சிவகங்கையில் ரொக்கமாக 16 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
மேலும், இதுவரை பறக்கும் படையினரால் ஏழரை கோடி ரூபாயும், நிலையான கண்காணிப்பு குழுவினரால் 9 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments