Breaking News

பீகாரில் மதுவிலக்கு அமுல்

பீகார், ஏப்ரல் 01-
பீகாரில் மக்கள் நலனை முன்னிட்டு மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்  மதுவிலக்கினை அமல்படுத்துவோம். மது மூலம் பல குடும்பங்கள்
அழிந்தும், குழந்தைகளின் கல்வியும், எதிர்காலமும் கேள்விக் குறியாகி வருகிறது. மேலும், மதுவினால் பெண்கள் அதிக அளவில்  பாதிக்கப்பட்டனர். இதனால், கடந்த ஆண்டு நடைபெற்ற பீகார் சட்ட மன்றத் தேர்தலில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என நிதிஷ் குமார் வாக்குறுதி அளித்தார்.

இந்த நிலையில்,  தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்கள் நலனை முன்னிட்டு மது விலக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.


No comments

Thank you for your comments