Breaking News

ஆண்டிப்பட்டி தொகுதி விஐபி தொகுதியா?

ஆண்டிப்பட்டி, ஏப்.04-
தமிழக அரசியலில் முக்கியத் தலைவர்கள் களம் காணும் தொகுதியாக 1980ம் ஆண்டு முதல் ஆண்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி திகழ்ந்து வருகிறது. 1980ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் வெற்றி பெற்றார். கடந்த 1984ம் ஆண்டு எம்ஜிஆர் உடல் நலம் குன்றி அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போது ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளராக அவரது சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. 

தொகுதியில் பிரசாரம் செய்யாமலேயே அந்தத்
தேர்தலில் வெற்றி பெற்று அவர் மீண்டும் முதல்வரானார். அதன்பிறகு இந்தத் தொகுதி விஐபி தொகுதியாகவே விளங்கி வருகிறது.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் இந்தத் தொகுதியில் ஐந்து முறை அதிமுகவும், இரண்டு முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. இதில் கடந்த 2002ம் ஆண்டு இடைத்தேர்தலிலும், 2006ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலிலும் ஜெயலலிதா இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்ஜிஆர் ஆண்டிப்பட்டி பேரவை உறுப்பினராக இருந்தபோது இந்த தொகுதிக்கு அண்ணா நு£ற்பாலை மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்ததால் இந்தப் பகுதி மக்களின் மனதில் நீங்கள் இடம் பிடித்தார். அதன்பிறகு ஜெயலலிதா 2002ம் ஆண்டு இடைத்தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வரானார். தேனி அரசு மருத்துக்கல்லு£ரி, ஆண்டிப்பட்டி&சேடப்பட்டி கூட்டு குடிநீர் திட்டம், அரசு மகளிர் தொழில் பயிற்சி நிலையம், அரசு கலைக்கல்லு£ரி, அரசு பாலிடெக்னிக் கல்லு£ரி மற்றும் அனைத்து பகுதிகளுக்கும் எளிதில் சென்று வர சாலை வசதி கடமலை&மயிலை ஒன்றியத்தில் குடிநீர் திட்டம் என இந்தப் பகுதி மக்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி மக்களின் நெஞ்சில் இடத்தைப் பிடித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் இந்தத் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடவில்லை. இதனால் இந்தப் பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். னுனவே, விரைவில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட வேண்டும் என இந்தப்பகுதி மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ஆனால் முதல்வர் ஜெயலலிதாவோ திருவள்ளூர் மாவட்டத்திலாவது, சென்னை மாவட்டத்திலாவது போட்டியிட தொகுதி தேடுவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

No comments

Thank you for your comments