ஐ.என்.எஸ். போர்க்கப்பலில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து: இந்திய மாலுமிகள் 3 பேர் காயம்
திருவனந்தபுரம், ஏப்.21-
கடந்த 16 ஆம் தேதி இந்த கப்பல் கொச்சிக்கு வந்த போது, கடற்படையில் நீச்சல் வீரர்கள் பயன்படுத்தும் ஆக்சிஜன் சிலிண்டரில் ஆக்சிஜன் ஏற்றும் பணி நடைபெற்றது.
இந்நிலையில், திடீரென சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் 3 வீரர்கள் காயமடைந்தனர். அதில் ஒரு வீரரின் வலது கால் துண்டானது.
காயம் அடைந்தவர்கள் 3 பேரும் திருவனந்தபுரத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அவர்கள் மும்பைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். தற்போது அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments