Breaking News

குழந்தைகளுடன் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் பாஜக எம்எல்ஏ

ஹரியானா, ஏப்.21-
Ram-bjp mlaஹரியானா மாநில பாஜக எம்எல்ஏ ஒருவர் பாதியில் விட்ட பள்ளிப்படிப்பை, தனது குழந்தைகளுடன் தொடரத் திட்டமிட்டுள்ளார்.

பாஜக எம்எல்ஏவான குல்வந்த் ராம் பாஸிகர் என்பவர் தனது 38 ஆவது வயதில், தனது
குழந்தைகளுடன் 12 ஆம் வகுப்புத் தேர்வு எழுத உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இளம் வயதிலேயே பொதுவாழ்க்கையில் ஈடுபாடு கொண்டதால், படிப்பை பாதியில் நிறுத்தி விட்டதாவும், ஆனால் எம்எல்ஏ பதவியேற்றவுடன் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால், தனது குழந்தைகளுடன் தானும் 12 ஆம் வகுப்புத் தேர்வுக்குத் தீவிரமாகத் தயாராகி வருவதாகவும் குல்வந்த் ராம் தெரிவித்துள்ளார். மேலும், சட்டப்படிப்பு படித்து பட்டம்பெறுவதே தனது லட்சியம் என்றும் அவர் நம்பிக்கையோடு பேசுகிறார்.

No comments

Thank you for your comments