Breaking News

ஈரோடு, கரூர், திருச்சியில் 107, சேலம் வேலூர், திருப்பூரில் 104- அனலை கக்கும் சூரியன்

சென்னை, ஏப்.21-
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருச்சி, கரூர், ஈரோடு நகரங்களில் 107 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருப்பூர், சேலம், வேலூர், தருமபுரியில் 104 டிகிரி வெயிலும் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது காலை 10 மணி நேரத்திலேயே கத்திரி வெயிலைப்போல அனல் மண்டையை பிளக்கிறது.

பல நகரங்களில் பதிவான வெப்பநிலை 10 மணி நிலவரப்படி ( பாரன்ஹீட்) சென்னை - 98 
 மதுரை - 102 
திருச்சி - 107 
கோவை - 100 
திருப்பூர் - 104 
நெல்லை - 94 
தூத்துக்குடி - 98 
 சேலம் - 104 
வேலூர் - 104 
கரூர் - 107 
ஈரோடு - 107 
கிருஷ்ணகிரி - 101 
தருமபுரி - 104 
திண்டுக்கல் - 94 
விருதுநகர் - 97 
 ராமநாதபுரம் - 92 
கொடைக்கானல் - 73 
உதகமண்டலம் - 72

வெயில் கொளுத்தி வருவதால் தமிழகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் முடங்கியுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

கத்திரி வெயில் மே மாதம் 4ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நீடிக்கும். இதற்கு முன்னதாக தமிழகத்தில் கோடை மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அதற்கான அறிகுறிகள் குறைவாக உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு வலுசேர்ப்பது போல தமிழகத்தில் 107 டிகிரி வரை வெயில் கொளுத்தி வருகிறது இது தொடர்ந்து 30ம் தேதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 30ம் தேதி வரை சென்னையில் சராசரியாக 103 டிகிரி முதல் 108 டிகிரி வெயில் நிலவும் என்று எச்சரிக்கும் வானிலை ஆய்வாளர்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்களான தர்மபுரி, கரூர், மதுரை, பாளையங்கோட்டை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் சராசரியாக 105 டிகிரி வெயில் நிலவும் என்று கூறியுள்ளனர். ஏப்ரல் 30ம் தேதி அரக்கோணம், மீனம்பாக்கம் உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் 108 டிகிரி எட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

No comments

Thank you for your comments