உத்தேச வரிவிதிப்பு கண்டித்து திருவண்ணாமலையில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை, மார்ச் 9-
வணிக வரித்துறையின் புதிய அரசாணை உத்தேச வரிவிதிப்பு கண்டித்து திருவண்ணாமலையில் வியாபாரிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம்முன்பு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர்
எம்.மண்ணுலிங்கம் தலைமை தாங்க, மாவட்ட செயலாளர் எஸ்.ராதா, மாவட்ட பொருளாளர் பி.செந்தில்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ஜி.பி.நாகராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாநில துணைத் தலைவர் எஸ்.ராஜசேகர் கண்டன பேருரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் வணிகவரி சட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும், புதிய
அரசாணையை ரத்து செய்ய வேண்டும், உத்தேச வரிவிதிப்பு அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை, வேட்டவலம், கீழ்பென்னாத்தூர், செங்கம், கலசபாக்கம், போளூர், ஆரணி, சேத்துப்பட்டு, செய்யாறு உள்பட மாவட்டம் முழுவதிலுமிருந்து 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் தி.மலை நகர தலைவர் ஏ.பிச்சாண்டி நன்றி கூறினார்.
No comments
Thank you for your comments