Breaking News

ஊக்கமருந்து விவாகாரத்தை விசாரிக்க புதிய அமைப்பு: ஐஓசி புதிய முடிவு

இந்தியா, மார்ச் 3-
சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் நேரடியாக இனிமேல் ஊக்கமருந்து குற்றச்சாட்டு வழக்குகளை விசாரிக்காது என தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊக்கமருந்து சோதனையில் சிக்கும் வீரர்களின் விவகாரம் குறித்து, இனிமேல் விளையாட்டு தீர்ப்பாயம் விசாரித்து தண்டனைகளை அறிவிக்கும் என செயற்குழு கூட்டத்தில்  முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, விளையாட்டு தீர்ப்பாயத்தின் தலைவரும், சர்வதேச ஒலிம்பிக் சம்மேளன உறுப்பினருமான ஜான் கோட்ஸ் தெரிவித்துள்ளார்.  இந்த புதிய முறைக்கு வீரர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஊக்கமருந்துக்கு எதிரான நிர்வாகம், விதிகள், தண்டனைகள் குறித்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம், விரைவில் முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து இந்த நடைமுறை அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சர்வதேச ஒலிம்பிக் சம்மேளன உறுப்பினர்களைக் கொண்ட ஒழுங்கு முறை கமிட்டி, ஊக்கமருந்து சர்ச்சை விவகாரங்களை விசாரித்து வந்தது. 

ஒழுங்கு முறைக் கமிட்டியின் தீர்ப்பில் திருப்தி இல்லையென்றால், வீரர்கள் சர்வசேத விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யும் நிலை, இது வரை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments