2016 ஆண்டிற்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி அறிவிப்பு : அமெரிக்காவில் நடைபெறும்
செஸ்
விளையாட்டு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் உலக செஸ்
சாம்பியன்ஷிப் போட்டி, இந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக செஸ் சாம்பியன்ஷிப்
போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டி இந்த மாதம் 10-ஆம் தேதி துவங்கி
30-ஆம் தேதி வரை ரஷ்யாவில் நடைபெற உள்ளது. ராவுண் ராபின் முறையில் 8
போட்டியாளர்கள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் உலக செஸ்
சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பார்கள்.
இந்நிலையில்
சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறும் இடம் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2016 உலக
செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வருகின்ற நவம்பர் மாதம் அமெரிக்காவின்
நியூயார்க் நகரில் நடைபெறும் என சர்வதேச செஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது.
நவம்பர் 11 முதல் 30 வரை நடக்கவுள்ள இந்தப் போட்டி, மொத்தம் 12 சுற்றுகளாக
நடைபெற உள்ளது. இதில் ஆறரை புள்ளிகளை எட்டும் வீரர் சாம்பியன் பட்டத்தை பெற
முடியும். சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர் நடப்பு சாம்பியன் கார்ல்சன்
வுடன் மௌனயுத்தம் நடத்துவார். கார்ல்சன் பங்கேற்கும் மூன்றாவது உலக செஸ்
சாம்பியன்ஷிப் போட்டி இதுவாகும். இதுவரை அவர் பங்கேற்ற இரு போட்டிகளிலும்
வெற்றி பெற்றுள்ளார். சென்னை மற்றும் ரஷ்யாவின் சூச்சி நகரில் நடைபெற்ற உலக
சாம்பியன்ஷிப் போட்டிகளில் விஸ்வநாதன் ஆனந்தைத் தோற்கடித்து உலக சாம்பியன்
ஆனார் கார்ல்சன். தற்போது உலக அளவிலான தரவரிசையில் கார்ல்சன்
முதலிடத்தில் உள்ளார். விஸ்வநாதன் ஆனந்த்துக்கு 12-வது இடமே கிடைத்துள்ளது.
No comments
Thank you for your comments