ஜெர்மனி பேட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றி
ஜெர்மனி , மார்ச்.3-
ஜெர்மனி
கிராண்ட்பிரி கோல்டு சர்வதேச போட்டி அங்குள்ள மெல்ஹெய்ம் அன் டெர் ருர்
நகரில் நடந்து வருகிறது. இதில் நடந்த பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று
ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-11, 21-13 என்ற நேர் செட்
கணக்கில் அமெரிக்காவின் ரோங் ஸ்சாபரை வீழ்த்தினார்.
ஆண்கள்
ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 12-21,
21-18, 21-11 என்ற செட் கணக்கில் போராடி ஜப்பானின் தகுமா யுடாவையும்,
காஷ்யப் (இந்தியா) 21-9, 21-9 என்ற நேர் செட் கணக்கில் உக்ரைனின் ஆர்டெம்
போச்டாரெவ்வை தோற்கடித்தனர்.
No comments
Thank you for your comments