Breaking News

சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலூர், மார்ச் 12-
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக பணிபுரிய விருப்பும் முன்னாள் படைவீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே தேர்தல் பாதுகாப்பு பணியில் சிறப்பு காவலர்களாக பணி புரிய விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் பணிவிலகல் சான்றுடன் வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குனர் அலுவலகத்தினை நேரில் அணுக விண்ணப்பித்து பயனடையுமாறு வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் மேஜர் து.பிரகாசம்(ஒய்வு) கேட்டுக்கொள்கிறார்.

வேலூர் கோட்டை சுற்று புற சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் முன்னாள் படைவீரர் நல மைய கட்டிடத்தில் இரண்டாம் தளம் 547.32 சதுர மீட்டர் காலியாக உள்ள உள்ள தளத்தின் மத்திய/மாநில அரசு அலுவலகத்திற்கு வாடகைக்கு விட தயார் நிலையில் உள்ளது. விருப்பம் உள்ள அலுவலர்கள் முன்னாள் படைவீரர் நல அலுவலகம், வேலூர். 

No comments

Thank you for your comments