Breaking News

திருவண்ணாமலை அருகே துப்பாக்கியுடன் சென்ற வாலிபர் கைது

திருவண்ணாமலை, மார்ச் 6: 

திருவண்ணாமலை அருகே உள்ள பரமனந்தல் பகுதியில் எஸ்.ஐ. தங்க குருநாதன் தலைமையில் காவல்துறையினர்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நாட்டு துப்பாக்கியுடன் வந்த வாலிபரை காவல்துறையினர் விசாரித்தனர். விசாரணையில் அந்த வாலிபர் பரமனந்தல் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் (30) என்பதும் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி எடுத்துக் கொண்டு காட்ட விலங்குகளை வேட்டையாட சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. காவல்துறையினர் நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து கலைச்செலவனை கைது செய்தனர்.

No comments

Thank you for your comments