Breaking News

தமிழகம், புதுச்சேரி, கேரளா தேர்தலுக்கு அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் - முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் நடைபெற்றது

சென்னை, மார்ச் 06:
 அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா முன்னிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், கழக வேட்பாளர்களாக போட்டியிட விருப்ப மனு செய்திருந்தவர்களுக்கான நேர்காணல் இன்று நடைபெற்றது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா முன்னிலையில், இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்கள் வரும் மே மாதம் 16-ம் தேதியன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு வேண்டி விருப்ப மனு செய்திருந்த கழக தொண்டர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.












No comments

Thank you for your comments