Breaking News

பலமான கூட்டணி அமைத்தே தேமுதிக தேர்தலை சந்திக்கும்: விஜயகாந்த் அறிவிப்பு?

சென்னை, மார்ச் 17-
பலமான கூட்டணி அமைத்தே தேமுதிக தேர்தலை சந்திக்கும் என்று கட்சி நிர்வாகிகளிடம் விஜயகாந்த் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தனித்துப் போட்டியிடப் போவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துவிட்டதால் தேமுதிகவின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள்
சீட் கேட்டு, கட்சித் தலைமையிடம் கட்டிய பணத்தை திருப்பிக் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதையறிந்த விஜயகாந்த், அதிருப்தியில் உள்ளவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். தேமுதிக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறுகையில், தேமுதிக தனது கூட்டணி அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்புவரை கட்சித் தலைமை அலுவலகத்துக்கு நூற்றுக் கணக்கான தொண்டர்கள் தினமும் வந்த வண்ணம் இருந்தனர். தனித்துப் போட்டி என்று அறிவித்த பிறகு தொண்டர்களின் வரத்து குறைந்தது. மாவட்டச் செயலாளர்கள் பலரும் கட்சியின் முடிவால் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர்.

தேமுதிக நிர்வாகிகள் சிலர் பாஜக, திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு செல்லப்போவதாக தகவல்கள் வெளியாகின்றன. இதையடுத்து மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் விஜயகாந்த் ஈடுபட்டுள்ளார். யாரும் அவசரப்பட வேண்டாம். கூட்டணி அமைத்து தான் போட்டியிடுவோம் என்று கூறி வருகின்றனர். முக்கிய நிர்வாகிகளிடம் விஜயகாந்தே பேசுகிறார்.

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ம.ந. கூட்டணி, தமாகா, புதிய தமிழகம், ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய வலுவான கூட்டணியை அமைப்பது தொடர்பாகவும் விஜயகாந்த் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் என தெரிவித்துள்ளனர்.

No comments

Thank you for your comments