Breaking News

தி.மலை மாவட்டத்தில் கூடுதலாக மது விற்பனையாகும் டாஸ்மாக் கடைகள் கணக்கெடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொன்னி உத்தரவு

திருவண்ணாமலை, மார்ச் 12-
திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையட்டி பதற்றமான பகுதி என முடிவு செய்ய கூடுதலாக மது விற்பனையாகும் டாஸ்மாக் கடைகள் கணக்கெடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.பொன்னி உத்தரவிட்டுள்ளார். அரசியல் கட்சிகளின் கூட்டணி, தொகுதி உடன்பாடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என தேர்தல் முழுமையாக இன்னும் சூடுபிடிக்கவில்லை. ஆனால் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே டாஸ்மாக் மதுபான விற்பனை சூடுபிடித்துள்ளது. பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியான பிறகு மதுபான விற்பனை கிடுகிடுவென உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலின்போது ஒட்டுமொத்தமாக மதுபானங்கள் விற்பனை
செய்ய டாஸ்மாக் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதேபோல இந்த தேர்தலிலும் ஒட்டுமொத்தமாக மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என டாஸ்மாக் ஊழியர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 307 டாஸ்மாக் மது கடைகள்  உள்ளன. அவற்றில் வழக்கமான விற்பனையை விட கூடுதலாக மதுபானம் விற்பனை ஆகும் டாஸ்மாக் கடைகளை கணக்கெடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.பொன்னி உத்தரவிட்டுள்ளார். மேலும் அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகும் மதுக்கடைகள் அமைந்துள்ள பகுதியை பதற்றமான பகுதி என முடிவு செய்துஅங்கு கூடுதல் போலீஸ் கண்காணிப்புக்கு உத்தரவிட்டுள்ளார். இதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகளவில் மதுபான விற்பனை நடைபெறும் டாஸ்மாக் மதுக்கடைகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளன.

மேலும் தினசரி மதுபான விற்பனை விவரங்கள் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். மேலும் மதுபாட்டில்கள் பதுக்கப்படுகிறதா எனவும் கண்காணித்து வருகின்றனர்.

No comments

Thank you for your comments