Breaking News

டோனியின் சட்டை காலரை பிடித்த பிராவோ !

 கொல்கத்தா, மார்ச் 11-

இந்திய அணி கேப்டன் டோனியின் சட்டை காலரை மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த ட்வெயின் பிராவோ பிடித்து இழுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

டி20 போட்டிகள் தொடங்குவதற்கு முன்னர் இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையே பயிற்சி ஆட்டம் கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டனில் நடந்தது. இதில் இந்திய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பிறகு பிராவோ டோனியின் சட்டை காலரை பிடித்து இழுத்துள்ளார். இதனால் முதலில் கோபமடைந்த டோனி பின்னர் அவர் விளையாட்டாக செய்தார் என அறிந்து சிரித்தார்.

இந்த நிகழ்வின் புகைப்படம் சமூக வலைதளங்களில் அனைவராலும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனியுடன், பிராவோ விளையாடியுள்ளார். 

No comments

Thank you for your comments