திமுக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியீடு
திமுகவின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிக்கை மற்றும் தொகுதி உடன்பாட்டுக் குழு கூட்டம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லத்தில் நடைபெற்றது. திமுக நேர்காணல் முடிந்து இரண்டாவது நாளாக இந்த கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன், தலைவர் கருணாநிதியிடம் தேர்தல் அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவருடைய பரிந்துரைக்குப் பின்னர், விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments
Thank you for your comments