இந்தியாவுக்கு வர பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு அரசு அனுமதி
இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்குபெற பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஆனால் பாதுகாப்பு காரணங்களை காட்டி பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளிக்கவில்லை.
இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையே தரம்சாலாவில் நடைபெறுவதாக இருந்த போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது என ஹிமாச்சல முதலமைச்சர் அறிவித்ததை தொடர்ந்து போட்டி கொல்கத்தாவிற்கு மாற்றப்பட்டது .
இதனால் பாகிஸ்தான் அணி இந்தியா வருவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பஷீத், இந்திய உள்துறை அமைச்சகத்துடன் பேச்சு நடத்தினார் அப்போது கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியின் போது உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் கொல்கத்தா காவல் ஆய்வாளர் ஆகியோர் எழுத்துபூர்வமாக அளித்த கடிதங்கள் அவரிடம் அளிக்கப்பட்டன இதனை தொடர்ந்து பாக்கிஸ்தான் அணி, இந்தியா வர அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

No comments
Thank you for your comments