Breaking News

வெற்றி நெருக்கடியில் இந்தியா.. வரலாற்றை மாற்றுமா பாகிஸ்தான்: சில சுவாரஸ்ய தகவல்கள்

கொல்கத்தா, மார்ச் 18-
டி20 உலகக்கிண்ணத் தொடரில் நாளை நடக்கும் லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

இந்தப் போட்டியில் இந்தியா கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில்
களமிறங்குகிறது.

நியூசிலாந்திடம் தோற்றதால் அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும். அதேசமயம் பாகிஸ்தானும் தோல்வி வரலாற்றை மாற்ற முனைப்புடன் உள்ளது.

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்.
* கொல்கத்தா ஈடன் கார்டனில், தற்போதுதான் முதன்றையாக இந்தியா- பாகிஸ்தான் அணிகள் டி20 போட்டியொன்றில் மோத உள்ளது.

* ஈடன் கார்டனில் இதற்கு முன்பு இவ்விரு அணிகளும் மொத்தம் 4 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் ஒன்றில் கூட இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றது கிடையாது.

* கொல்கத்தாவில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதன் மூலம் பாகிஸ்தான் அந்த மைதானத்தில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற சாதனையை படைத்துள்ளது.

* உலகக்கிண்ணத் தொடரில் இதுவரை இந்தியாவும், பாகிஸ்தானும் 7 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் இந்தியா ஒரு போட்டியில் மட்டும் (2012, பெங்களூர்) தோற்றுள்ளது. மற்ற அனைத்து போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது.

* பாகிஸ்தானுக்கு எதிராக மோதிய கடந்த 7 போட்டிகளிலும் இந்திய அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி தான். அவர் தலைமையிலான இந்திய அணி தான் தற்போதும் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.

* பாகிஸ்தான் அணி இதுவரை முகமது ஹபீஸ் (4 போட்டி), சோயிப் மாலிக் (2 போட்டி), அப்ரிடி (1 போட்டி) என 3 வெவ்வேறு தலைவர்கள் தலைமையில் 7 டி20 போட்டிகளில் இந்தியாவை எதிர்கொண்டுள்ளது.

* தற்போதைய அணியில் டோனி, ரோஹித் ஷர்மா, ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், ஹபீஸ், அப்ரிடி, சோயிப் மாலிக் ஆகியோர் 2007 டி20 உலகக்கிண்ண இறுதி போட்டியில் விளையாடிய இரு அணி வீரர்களாவர்.

* உலகக்கிண்ண டி20 வரலாற்றில் இதுவரை இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்தது இல்லை. இதுவரை ஆடிய 4 போட்டிகளிலும் இந்தியாவே வென்றுள்ளது.

No comments

Thank you for your comments