Breaking News

டி20 உலகக்கிண்ணத்தில் அற்புதங்களை நிகழ்த்த முடியும்: மேத்யூஸ் உற்சாகம்

இந்தியா, மார்ச் 18-
இலங்கை அணியால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்று அணித்தலைவர் மேத்யூஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளால்
வெற்றி பெற்றது.

இந்த வெற்றி குறித்து மேத்யூஸ் கூறுகையில், இந்த வெற்றி முக்கியமான ஒன்று. சமீபத்தில் நடந்த சிலப் போட்டிகளில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை.

இந்தப் போட்டியில் பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டனர். அதேபோல் ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக ஆடி ஓட்டங்கள் சேர்த்தனர்.இந்த தொடரில் நாங்கள் உடனே இறுதிப் போட்டியை பற்றி நினைக்கவில்லை. அடுத்தக்கட்ட போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புகிறோம். 

நாங்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் கண்டிப்பாக அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்று கூறியுள்ளார்.

No comments

Thank you for your comments