Breaking News

"ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க வேண்டும்": அமெரிக்காவின் புதிய திட்டம்!

அமெரிக்கா, மார்ச் 7-
உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐஎஸ் தீவிரவாதிகளை அழிப்பதற்காக அமெரிக்கா புதுரக விமானங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே, B-1 Lancer போர் விமானங்கள் மூலம் அணு ஆயுதங்களை பயன்படுத்தி, அமெரிக்க தலைமையிலான
கூட்டுப்படைகள் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், அணு குண்டுகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்தக் கூடிய திறன் கொண்ட B-52 Stratofortress போர் விமானங்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் மீதான நடவடிக்கைகளில் பயன்படுத்த அமெரிக்கா முடிவெடுத்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதல் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்றும் ஆனால் இதுகுறித்த தெளிவான தகவல்களை அமெரிக்கா வெளியிடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments