Breaking News

6வது முறையாக ஆசியக்கிண்ணம் வென்ற இந்தியா!

இந்தியா, மார்ச் 7-
ஆசியக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை 8 விக்கெட்டுகளால் வீழ்த்திய இந்தியா 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

6வது முறை:
இதன் மூலம் ஆசியக்கிண்ண வரலாற்றில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற சாதனையை இந்தியா
படைத்தது. தவிர, 6 ஆண்டுகளுக்கு பின் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

முதல் அணி:
முன்னதாக 12 முறை ஆசியக்கிண்ண தொடர்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முறை முதன்முறையாக டி20 போட்டிகளாக நடத்தப்பட்டது. இதில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

வங்கதேச அணியின் ஏமாற்றம்:
இறுதிப் போட்டியில் வங்கதேசம் தோற்று ஏமாற்றுவது இது 2வது முறையாகும். இதற்கு முன் 2012ல் மிர்புரில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் 2 ஓட்டங்களால் தோற்றது.

தவான் அசத்தல்:
நேற்றையப் போட்டியில் சிறப்பாக ஆடிய ஷிகர் தவான் 60 ஓட்டங்கள் குவித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் அதிகபட்ச ஓட்டங்களை அவர் பதிவு செய்தார். இதற்கு முன் கடந்த பெப்ரவரி மாதம் இலங்கைக்கு எதிராக எடுத்த 51 ஓட்டங்களே அதிகபட்சமாக இருந்தது.

அதிக ஓட்டங்கள்:
இந்த தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் வங்கதேச வீரர் சபிர் ரஹ்மான் (5 போட்டி, 176 ஓட்டங்கள்), எமிரேட்ஸ் வீரர் முகமது உஸ்மான் (7 போட்டி, 176 ஓட்டங்கள்) ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர். இந்திய வீரர் கோஹ்லி (5 போட்டி, 153 ஓட்டங்கள்) 3வது இடத்தில் உள்ளார்.

அதிக விக்கெட்டுகள்:
அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் எமிரேட்ஸ் அணித்தலைவர் அஜ்மத் ஜாவத் (7 போட்டி, 12 விக்கெட்) முதலிடம் பிடித்தார். வங்கதேச வீரர் அல் அமின் (5 போட்டி, 11 விக்கெட்), எமிரேட்ஸ் வீரர் நவீத் (7 போட்டி, 11 விக்கெட்) ஆகியோர் 2வது இடம் பிடித்தனர்.

No comments

Thank you for your comments