Breaking News

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயிர்த்தொழில்நுட்பவியல் கருத்தரங்கு

திருவண்ணாமலை, மார்ச் 7-
திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையிலுள்ள சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயிர் தொழில்நுட்பவியல் துறை சார்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. சுற்றுச்சூழல் உயிர்தொழில்நுட்பவியல் தற்போதைய நிகழ்வுகள் மற்றும் போக்குகள் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்குக்கு கல்லூரியின் தலைவர் பி.ராமச்சந்திர உபாத்யாயா தலைமை தாங்கி பேசினார். கல்லூரி செயலாளரும தாளாளருமான எஸ்.கார்த்திகேயன் முன்னிலை வகித்து பேசினார்.

உயிர்தொழில்நுட்பவியல் துறை தலைவர் எம்.கோபு கருத்தரங்குக்கு வந்திருந்தஅனைவரையும் வரவேற்று பேசினார். சவுத் கொரியா சன்புக் நேஷனல் பல்கலைக்கழகத்தின் உயிர்தொழில்நுட்பவியல் துறை பேராசிரியர் எம்.கோவர்த்தனன்கலந்து கொண்டு சுற்றுச்சூழல் மாசுபாடுகளின்தீமைகள் மற்றும் இதன்விளைவுகள் குறித்தும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் வேதிப்பொருட்களின் தீமைகள் அகுறித்தும் மாணவ மாணவிகளிடம் விளக்கி பேசினார். கருத்தரங்கில் கல்லூரி பொருளாளர் எஸ்.டி.ஆர்.எஸ்.பாபு, அறக்கட்டளை உறுப்பினர் கலைமணி, கல்வி புல முதன்மையாளர் அழஉடையப்பன், முதல்வர் கே.ஆனந்தராஜ், உயிர் தொழில்நுட்பவியல் துறை பேராசிரியை எஸ்.குணசுந்தரி, உதவி பேராசிரியர் கே.ஜெயப்பிரகாஷ், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டார்கள்.

No comments

Thank you for your comments