தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்துதல் குறித்த ஆலோசனைக் கூட்டம்
காட்பாடி, மார்ச் 16-
காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மேல்பாடி
உள்வட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்துதல், தேர்தல்
பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மேல்பாடி
ஒன்றிய தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு காட்பாடி சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கே.மதிவாணன் தலைமை வகித்து பேசியதாவது:
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட
நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. எனவே காட்பாடி
சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட மேல்பாடி உள்வட்ட பகுதிகளில் காணப்படும்
அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்க வேண்டும். மேலும், விளம்பரப்
பதாகைகளையும், கொடிக் கம்பங்களையும் அகற்ற வேண்டும்.
இதுதொடர்பாக, 24 மணி நேரத்துக்குள் அறிக்கை தாக்கல்
செய்ய வேண்டும். தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக இணையதளம் மூலம்
புகார் அளிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, இதுவரை 38
புகார்கள் வந்துள்ளன. எனவே தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளவர்கள்
விழிப்புடன் பணியாற்ற வேண்டும். அதேபோல் தேர்தல் பறக்கும் படையினரும்,
தேர்தல் நிலைக் கண்காணிப்புக் குழுவினரும் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட
வேண்டும். அப்போது, எவ்வித பாரபட்சமும் காட்டக் கூடாது என்றார்.
காட்பாடி சட்டப் பேரவைத் தொகுதி துணைத் தேர்தல்
அலுவலர்கள் டி.ராஜசேகர், ஜி.சரவணன், ரவி, மேல்பாடி உள்வட்ட வருவாய்
ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments