Breaking News

மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, மார்ச் 16-
கோவையில் உள்ள மருத்துவமனைக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக, 108 ஆம்புலன்ஸை தொடர்புகொண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு வந்த அழைப்பில் பேசிய மர்ம நபர், கோயம்புத்தூர் அன்னூரில் உள்ள அரசு மருத்துவமனையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என கூறிவிட்டு
இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

 இதுகுறித்து ஊழியர்கள் சென்னை பெருநகரக் காவல் துறைக்கு தகவலை தெரிவித்தனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில், குறிப்பிட்ட மருத்துவமனையில் கோயம்புத்தூர் போலீஸார் சோதனையிட்டனர். அங்கு வெடிபொருள் ஏதும் சிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Thank you for your comments