பெங்களூர் டிராபிக்கை பார்த்து பயந்த யு.எஸ். விமான நிறுவன தலைவர்
பெங்களூர், மார்ச் 14-
அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் உள்ள டேட்டனில் இருக்கும் ரைட்
பிரதர்ஸ் விமான நிறுவனத்தின் துணை டைரக்டர் நிக் எங்ளர் தனது
மனைவி மேரி ஜேனுடன் இந்தியாவுக்கு வந்திருந்தார். பெங்களூர் வந்த அவர் இங்கிருக்கும் டிராபிக்கை பார்த்து பயந்துவிட்டார்.
மனைவி மேரி ஜேனுடன் இந்தியாவுக்கு வந்திருந்தார். பெங்களூர் வந்த அவர் இங்கிருக்கும் டிராபிக்கை பார்த்து பயந்துவிட்டார்.
இது குறித்து நிக் கூறுகையில்,
பெங்களூர் இந்தியாவின் ஐடி நகரம் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். ஆனால்
விமான போக்குவரத்திற்கும் முக்கிய நகரமாக பெங்களூர் உள்ளது இங்கு வந்த
பிறகே தெரிந்தது. விஸ்வேஸ்வரய்யா இன்டஸ்ட்ரியல் மற்றும் டெக்னாலஜி
மியூசியம்(விஐடிஎம்) தவிர்த்து பிற பெரிய நிறுவனங்களுடன் நான் அவ்வளவாக
பேசியது இல்லை.
ஏனென்றால் எனக்கு எலக்ட்ரிக் கார் தொழில்நுட்பம் மிகவும் பிடித்துள்ளது. விஐடிஎம் அருகில் தான் ரேவா தலைமையகம் உள்ளது.
நான் 6 ஆயிரம் பேர் வசிக்கும் ஊரில் உள்ளேன். அங்கு டிராபிக்
இருக்காது. தெருவோரம் குழந்தைகள் கூடைப்பந்து விளையாடுவார்கள். பெங்களூர்
டிராபிக்கை பார்த்து பயமாக உள்ளது. இது போன்று நான் நியூயார்க்,
வாஷிங்டனில் கூட டிராபிக்கை பார்த்தது இல்லை என்றார்.
நிக் தனது நண்பர் ஒருவருக்கு அனுப்பிய இமெயிலில் கூறியிருப்பதாவது,
பெங்களூர் டிராபிக் உலக அதிசயங்களில் ஒன்று. இந்திய வாகன ஓட்டிகள் ஹார்னை
அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். போக்குவரத்து தான் பயமாக இருந்தது. ஆனால்
மக்கள் அன்பானவர்களாக இருந்தனர் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments