Breaking News

சென்னையில் ராமானுஜருக்கு மணிமண்டபம் தமிழக அரசு அமைக்க வேண்டும் திருவண்ணாமலையில் நடைபெற்ற வைணவ மாநாட்டில் தீர்மானம்

தி.மலை, மார்ச் 14-
சென்னையில் ஸ்ரீ பகவத் ராமானுஜருக்கு மணிமண்டபம் தமிழக அரசே அமைக்க வேண்டும் என திருவண்ணாமலையில் நடந்த ஸ்ரீ வைணவ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை அமுதா திருமண மஹாலில் ஸ்ரீ பகவத் ராமானுஜர் ஆயிரமாவதாண்டை முன்னிட்டு ஸ்ரீ வைணவ இளைஞர்கள் நடத்தும் ஏழாவது ஸ்ரீ வைணவ மாவட்ட மாநாடு நேற்று நடைபெற்றது.  இந்த மாநாட்டுக்கு டாக்டர் ஸ்ரீ.க.ச.ஸ்ரீதர் தலைமை தாங்க, பலராம ராமானுஜதாசர் அனைவரையும் வரவேற்றார். கோகுல கிருஷ்ணன் மாநாட்டுக்கு முன்னிலை வகித்தார். இந்த மாநாட்டையட்டி ஸ்ரீஎதிராஜரும் ரங்கராஜரும், திருநாரணனும்
எதிராஜனும், ஸ்ரீ தேவரானும் எதிராஜனும், ஸ்ரீ கோவிந்தராஜனும் எதிராஜனும் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாணல்மேடு ஜெயராம ராமானுஜ திசகதாசர், ஆலம்பூண்டி சுதர்சன ராமானுஜ தாசர், செஞ்சி துரைசாமி ராமானுஜர்தாசர், மெய்யூர் ஆதிமூலம் ராமானுஜர் தாசர் ஆகியோர்களுக்கு உடையவர் திருவடி என்ற விருதுகள் மாநாட்டில் வழங்கப்பட்டது. இந்த மாநாட்டில் ராமானுஜ மஹாதேசிகன் சுவாமிகள் மாநாட்டை துவக்கிவைத்து பக்தர்களுக்கு அருளுரை வழங்கினார்.

இந்த மாநாட்டில் சென்னையில் ஸ்ரீராமானுஜருக்கு மணிமண்டபம் தமிழக அரசு கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன. முன்னதாக இந்த மாநாட்டை தி.மலை மாடவீதியில் 25 பஜனை குழுக்களுடன் ஏராளமான பக்தர்கள் ஊர்வலம் வந்து மாநாட்டு வந்தடைந்தனர். மாநாட்டில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வைணவ பக்தர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ராமன் ராமானுஜதாசர் நன்றி கூறினார்.

No comments

Thank you for your comments