Breaking News

தேமுதிக தனித்து போட்டியிடுவதால் திமுகவுக்கு பின்னடைவு இல்லை: மு.க. ஸ்டாலின் கருத்து

சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்ற விஜயகாந்தின் அறிவிப்பால் திமுகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை என அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 

வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக திமுகவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட வேண்டும் என கூறி திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் விஜயகாந்த்திற்கு அழைப்புவிடுத்திருந்தனர்.

ஆனால் நேற்று நடந்த தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டத்தில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் என  அறிவித்தார். இதனால் திமுகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை என மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்.   

இதேபோல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்புவும் தேமுதிக கூட்டணிக்கு வராததால் தங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளார். 

No comments

Thank you for your comments